You are here

விளையாட்டு

வாகை சூடியது ஆஸ்திரேலியா

57 ஓட்டங்களை விளாசி தமது அணி நல்ல இலக்கை நிர்ணயிக்க உதவிய ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட்.  படம்: ஏஎஃப்பி

பார்பேடோஸ்: வெஸ்ட் இண்டீசில் நடந்த மூன்று நாடுகள் பங்கேற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் அந்த அணி 58 ஓட்ட வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது. மூன்றாவது அணியாக இந்தத் தொடரில் பங்கேற்ற தென்னாப் பிரிக்கா ஒரே ஒரு புள்ளி வித்தி யாசத்தில் இறுதிச் சுற்றுக்கு முன் னேறும் வாய்ப்பை இழந்தது.

மேன்யூவை நெருங்கும் ஸ்லாட்டன்

சுவீடன் வீரர் ஸ்லாட்டன் இப்ராகிமோவிச், 34

மான்செஸ்டர்: அனைத்துலகக் காற்பந்தில் இருந்து ஓய்வுபெற்ற சுவீடன் வீரர் ஸ்லாட்டன் இப்ராகிமோவிச், 34 (படம்), மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவுடன் ஒப்பந்தம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. இவர் அடுத்த வாரம் மேன்யூவின் மருத்துவச் சோதனையில் பங்கேற்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, ஆர்மீனிய வீரர் ஹென்ரிக் மகிதார்யானை தன் பக்கம் இழுக்கும் மேன்யூவின் முயற்சியும் ஈடேறும் நிலையில் உள்ளதாகத் தெரிகிறது.

விடைபெற்றார் மெஸ்ஸி

அர்ஜெண்டினா அணித்தலைவர் லயனல் மெஸ்ஸி

நியூஜெர்சி: அனைத்துலகக் காற் பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் அர்ஜெண்டினா அணித்தலைவர் லயனல் மெஸ்ஸி. சிலி அணிக்கெதிரான கோப்பா அமெரிக்கா இறுதிப் போட்டியில் பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி கோட்டைவிட்டதால் தொடர்ந்து இரண்டாவது முறையாக கிண் ணத்தைப் பறிகொடுத்தது அவரது அர்ஜெண்டினா அணி. “இது எனக்கானது அல்ல. தேசிய அணியுடனான எனது பயணம் முடிந்துவிட்டது. என்னால் முடிந்த அளவு உழைத்தும் வெற்றி யாளராக முடியாதது என்னைக் காயப்படுத்துகிறது,” என்றார் மெஸ்ஸி.

கோப்பா அமெரிக்கா: அதே எதிரி, அதே முடிவு

அமெரிக்கா கிண்ணம் வென்ற மகிழ்ச்சியில் கிளாடியோ பிராவோ

நியூஜெர்சி: உலகின் மிகப் பழமை யான காற்பந்துப் போட்டியான கோப்பா அமெரிக்கா தொடரில் வாகை சூடும் என எதிர்பார்க்கப்பட்ட அர்ஜெண்டினாவை 4-2 என பெனால்டி வாய்ப்புகளில் வீழ்த்திக் கிண்ணத்தைத் தக்க வைத்துக்கொண்டது சிலி.

கடந்த ஆண்டு நடந்த கோப்பா அமெரிக்கா தொடரிலும் இவ்விரு அணிகளே மோதின. இம்முறை போலவே சென்ற முறை யும் ஆட்ட நேரத்திலும் கூடுதல் அரைமணி நேர ஆட்டத்திலும் இரு அணிகளும் ஒரு கோல்கூட அடிக்கவில்லை. அப்போதும் பெனால்டி வாய்ப்புகளில் 4-1 என வென்றிருந்தது சிலி.

யூரோ: வலிமையைப் பறைசாற்றிய ஜெர்மனி

பாரிஸ்: உலகக் கிண்ண வெற்றியாளராக இருந்தபோதும் நடப்பு யூரோ காற்பந்துத் தொடரின் பிரிவுச் சுற்று ஆட்டங்களில் எதிர்பார்த்த அளவிற்குச் செயல் படாத ஜெர்மனி, காலிறுதிக்கு முந்திய சுற்று ஆட்டத்தில் தனது பலத்தை நிரூபித்தது. உலகத் தரநிலையில் நான்காம் இடத்தில் இருக்கும் ஜெர்மனி தன்னைவிட 20 இடங்கள் பின் தங்கியுள்ள ஸ்லோவாக்கியாவை 3=0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. ஆட்டம் தொடங்கி எட்டாவது நிமிடத்தில் அதிக தொலைவில் இருந்து பந்தை வலைக்குள் உதைத்து ஜெர்மனிக்கு முன் னிலை பெற்றுத் தந்தார் ஜெரோம் போட்டெங். பயர்ன் மியூனிக் குழு வீரரான இவர் அனைத்துலகப் போட்டிகளில் அடித்த முதல் கோல் இதுதான்.

கோப்பா அமெரிக்கா: 3ஆம் இடத்தை வென்ற கொலம்பியா

ரொனால்டோ (வலது)

கோப்பா அமெரிக்கா காற்பந்துக் கிண்ணப் போட்டியின் மூன்றாம், நான்காம் இடங்களுக்கான ஆட்டத்தில் யுஎஸ்ஏ அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மூன்றாம் இடத்தைப் பெற்றது கொலம்பியா. இரு அணிகளுமே ஆட்டத்தில் முனைப்புடன் தாக்குதல்களில் கவனம் செலுத்தின. இத்தாலியின் ஏ சி மிலான் குழுவின் நட்சத்திர ஆட்டக்காரரான கார்லோஸ் பக்கா ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் முதல் கோலை வலைக்குள் புகுத்தினார்.

கால் இறுதியில் போர்ச்சுகல்

தகுதிச் சுற்றில் ஓர் ஆட்டத்தில்கூட வெற்றி பெறாமல் மூன்று ஆட்டங் களிலும் சமநிலை கண்டபோதும் யூரோ 2016ன் புதிய விதி முறைகளின் பலனால் போர்ச்சுகல் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. அதிர்ஷ்டத் தேவதையின் பார்வை தொடர்ந்து போர்ச்சுகலின் மீதுதான் உள்ளது போலும். அது நேற்று பின்னிரவு நடந்த ஆட்டத்தில் குரோஷியாவை 1-0- என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டு கால் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

அயர்லாந்து எதிர்நோக்கும் பிரெஞ்சு சவால்

அயர்லாந்தின் ராபர்ட் பிராடியும் (இடது) பிரான்சின் எண்டோய்ன் கிரிஸ்மானும் (வலது)

லியோன்: ஐரோப்பிய கிண்ண காற்பந்துப் போட்டியின் காலிறுதி சுற்றை இலக்காகக் கொண்டு போட்டியை ஏற்று நடத்தும் பிரான்ஸ், இன்றிரவு நடைபெறும் ‘நாக் அவுட்’ சுற்றில் அயர்லாந் துடன் மோதுகிறது. முதல் சுற்று ஆட்டங்களில் ருமேனியாவை 2-1 எனும் கோல் கணக்கிலும் அல்பேனியாவை 2-=0 எனும் கோல் கணக்கிலும் பிரான்ஸ் தோற்கடித்தது. ஆனால் முதல் சுற்றின் இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அதனால் கோல் போட முடியவில்லை. ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது.

பெல்ஜியத்தை மிரட்டும் ஹங்கேரியின் கட்டுக்கோப்பு

டுலூஸ்: திறமைமிக்க நட்சத்திரப் பட்டியலைக் கொண்டிருக்கும் பெல்ஜியம் நாளை அதிகாலை நடைபெறும் ‘நாக் அவுட்’ ஆட்டத்தில் ஹங்கேரிக்கு எதிராக மெத்தனத்துடன் விளையாடினால் அதற்கு ஆபத்து திண்ணம். குழு உணர்வோடு கட்டுக் கோப்புடன் விளையாடும் ஹங்கேரி யாரும் எதிர்பாராத வகையில் ‘எஃப்’ பிரிவின் முதல் நிலையைப் பிடித்து ‘நாக் அவுட்’ சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

கோல் வேட்டையில் இறங்க தயாராகும் ஜெர்மனி

லீல்: ஜெர்மனிக்கும் சிலோவாக் கியாவுக்கும் இடையிலான ஆட்டம் இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. இப்போட்டியில் இதுவரை ஒரு கோல்கூட விடாமல் பிடிவாதமாக இருக் கும் ஜெர்மனியின் தற்காப்பு இன்றைய ஆட்டத்திலும் இதைத் தொடர முனைப்புடன் உள்ளது. ஆனாலும் தற்காப்பு வலிமைமிக்கதாக இருந்தால் மட்டும் போதாது.

Pages