You are here

விளையாட்டு

கோல் நாயகன் கிரீஸ்மன்; இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்

கோல் நாயகன் கிரீஸ்மன்; இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்

மார்சே: ஐரோப்பியக் கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு போட்டியை ஏற்று நடத்தும் பிரான்ஸ் தகுதி பெற் றுள்ளது. உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றி யாளரான ஜெர்மனியை அது நேற்று அதிகாலை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் தோற் கடித்தது.

34 சமூக மன்றங்களில் நேரடி ஒளிபரப்பு

ஐரோப்பியக் கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டம் சிங்கப்பூரில் உள்ள 34 சமூக மன்றங்களில் வரும் திங்கட்கிழமை அதிகாலை 3 மணிக்கு நேரடி ஒளிபரப்பாகத் திரையிடப்படும். பிரான்சுக்கும் போர்ச்சுகலுக்கும் இடையிலான இறுதி ஆட்டத்தை சமூக மன்றங்களில் நேரடி ஒளிபரப்பாகத் திரையிடுவது குறித்து மக்கள் கழகம் மகிழ்ச்சி தெரிவித்தது. இதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், அண்டைவீட்டார் ஆகியோருடன் ஒன்றாக நேரத்தைச் செலவழிக்க வாய்ப்பு அமைகிறது என்று அது தெரிவித்தது.

கனவு மெய்ப்படும் தூரத்தில் போர்ச்சுகல்

ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் போர்ச்சுகலின் முதல் கோலை முட்டிய ரொனால்டோ. ஏஎஃப்பி

லியோன்: உலகின் தலைசிறந்த காற்பந்து ஆட்டக்காரர் விருதை மூன்று முறை வென்றுள்ளபோதும் நடப்பு யூரோ தொடரின் காலிறுதிச் சுற்று வரை போர்ச்சுகல் அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. அந்த ஏமாற்றங்களை எல்லாம் துடைத்தெறியும்விதமாக அமைந் தது அரையிறுதியில் ரொனால்டோ வெளிப்படுத்திய ஆட்டம். வேல்ஸ் அணிக்கெதிராக நேற்று அதிகாலை நடந்த அரை இறுதிப் போட்டியின் முதல் பாதி யில் இரு அணிகளின் கோல் முயற்சிகளும் பலிக்கவில்லை.

மேன்யூவில் ஆர்மீனிய வீரர்

ஹென்ரிக் மகிதார்யான். படம்: மான்செஸ்டர் யுனைடெட்

மான்செஸ்டர்: ஜெர்மனியின் பொருஸியா டோர்ட்மண்ட் குழு விற்காக விளையாடி வந்த ஆர்மீனிய நாட்டின் ஹென்ரிக் மகிதார்யான், 27, மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவுடன் நான்காண்டு ஒப்பந்தத்தில் கை யெழுத்திட்டுள்ளார். மத்தியத் திடல் ஆட்டக்காரரான இவர் தாக்குதலிலும் ஆதிக்கம் செலுத்தும் திறமை படைத்தவர். கடந்த மூன்று பருவங்களில் பொருஸியா குழு சார்பில் 140 போட்டிகளில் களமிறங்கிய இவர் 41 கோல்களையும் அடித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்: இலங்கையைப் புரட்டி எடுத்த இங்கிலாந்து

டி20 கிரிக்கெட்: இலங்கையைப் புரட்டி எடுத்த இங்கிலாந்து

சவுதாம்ப்டன்: இலங்கைக்கு எதி ரான டி20 கிரிக்கெட் ஆட்டத்தை இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கைப்பற்றியது. 73 ஓட்டங்கள் குவித்து ஆட்ட மிழக்காத ஜாஸ் பட்லர் இங்கி லாந்தின் வெற்றிக்கு வித்திட்டார். பட்லரின் இந்த அபார ஆட்டம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட அவருக்கு வாய்ப்பளிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தின் அணித் தலை வர் மோர்கன் 47 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

போர் முரசு கொட்டும் பிரெஞ்சு, ஜெர்மன் வீரர்கள்

வெற்றிக்குக் குறி வைத்துள்ள ஜெர்மனியின் தாமஸ் மியூலர் (இடது), பிரான்சின் அன்டோய்ன் கிரிஸ்மன் (வலது). படம்: ஏஎஃப்பி

மார்சே: ஐரோப்பியக் கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு பிரான்ஸ் தகுதி பெறவேண்டுமாயின் இன்றிரவு நடைபெறும் அரையிறுதியில் அது பலம் பொருந்திய ஜெர்மனியைத் தோற்கடிக்கவேண்டும். 1958ஆம் ஆண்டிலிருந்து காற்பந்துப் போட்டிகளில் ஜெர்மனி யை பிரான்ஸ் வென்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல், 1982லும் 1986லும் நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிகளின் அரையிறுதிகளில் நட்சத்திரப் பட்டாளத்துடன் மின்னிய பிரான்சை ஜெர்மனி தோற்கடித்து வெளியேற்றியது பிரெஞ்சு ரசிகர் களின் மனதிலிருந்து நீங்கா ரணமாக இன்று வரை இருந்து வருகிறது.

ஆஸ்கர் பிஸ்டோரியசிற்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை

தென்னாப்பிரிக்க ஒலிம்பிக் வீரரான ஆஸ்கர் பிஸ்டோரியஸ்

பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்க ஒலிம்பிக் வீரரான ஆஸ்கர் பிஸ்டோரியஸ் 2013ஆம் ஆண்டு அவரது காதலியான ரீவா ஸ்டீன்காம்பை சுட்டுக்கொன்ற வழக்கில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்டதும் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் உடனடியாக சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக தகவல்கள் கூறின.

‘ஜெர்மனியை வீழ்த்த முழு முயற்சி செய்வோம்’

பிரான்ஸ் நிர்வாகி டெஸ்சாம்ப்ஸ். படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: யூரோ காற்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதியில் நாளை மறுநாள் நடைறவுள்ள ஆட்டத்தில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது பிரான்ஸ். “நாங்கள் உலகின் சிறந்த காற்பந்து அணியுடன் மோதப் போகிறோம்,” என்று கூறியுள்ளார் பிரான்ஸ் அணியின் நிர்வாகி டெஸ்சாம்ப்ஸ். ஆனால், தனது அணி உலகின் சிறந்த அணியை வெல்லும் என்று தான் நம்பு வதாகவும் அவர் கூறினார். இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ஐஸ்லாந்து அணியை 5=2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி யது போட்டியை ஏற்று நடத்தும் பிரான்ஸ்.

இங்கிலாந்தின் பங்ளாதேஷ் பயணம் சந்தேகம்

தீவிரவாதிகள் தாக்குதலை அடுத்து பங்ளாதேஷ் தொடரைப் பொதுவான இடத்தில் நடத்த இயான் மோர்கன் விருப்பம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பங்ளாதேஷ் சென்று ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடத் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் டாக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்கு தலில் பலர் உயிரிழந்தனர். இதனால் இங்கிலாந்து கிரிக் கெட் அணியின் வங்காளதேச பயணம் திட்டமிட்டபடி நடை பெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

‘சிறப்பாக விளையாடுவோம்’

மும்பை: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி நேற்று வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டுச் செல்லத் தயாராக இருந்தது. முதல் போட்டி 21ஆம் தேதி நார்த் சவுண்டில் தொடங்கி, ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை இத்தொடர் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக 9ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையும் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. இந்திய டெஸ்ட் அணி தலைவர் விராத் கோஹ்லி, தலைமை பயிற்சியாளருடன் இணைந்து இப்பயணம் குறித்து பேட்டியளித்தார்.

Pages