You are here

விளையாட்டு

வெஸ்ட் பிரோம்விச்சிடம் வீழ்ந்த யுனைடெட்

வெஸ்ட் பிரோம்விச் குழு - யுனைடெட் குழு. படம்: ராய்ட்டர்ஸ்

வெஸ்ட் பிரோம்விச்: சாம்பி யன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதி பெற வேண்டும் என்று மான் செஸ்டர் யுனைடெட் கொண் டிருக்கும் கனவுக்கு வெஸ்ட் பிரோம்விச் மூலம் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடை பெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் பிரோம்விச்சிடம் எதிர்பாராத தோல்வியை யுனைடெட் சந்தித் தது. ஆட்டம் 1=0 எனும் கோல் கணக்கில் வெஸ்ட் பிரோம் விச்சுக்குச் சாதகமாக முடிந் தது. ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் யுனைடெட்டின் ஜுவான் மாட்டாவுக்குச் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப் பட்டார்.

லெஸ்டர் காட்டில் அடைமழை

வெற்றி கோலை கொண்டாடும் லெஸ்டரின் ரியாட் மாரேஸ் (வலமிருந்து இரண்டாவது). படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: வாட்ஃபர்ட் குழுவுக்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் லெஸ்டர் சிட்டி 1=0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தைக் கைப்பற்றிய லெஸ்டர், லீக் பட்டியலில் அதன் முன்னிலை இடைவெளியை அதிகரித்துள்ளது. இரண்டாம் நிலையில் உள்ள ஸ்பர்ஸ் குழுவைவிட லெஸ்டர் சிட்டி கூடுதலாக ஐந்து புள்ளி கள் எடுத்துள்ளது. இன்னும் ஒன்பது ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் வேளை யில் இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலை வெல்லும் வாய்ப்பை லெஸ்டர் வலுப்படுத்தியுள்ளது.

சரணடைய மறுக்கும் ஆர்சனல் குழு

ஆர்சனல் கோல்காப்பாளர் எடுத்துக்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. படம்: ஏஎஃப்பி

லண்டன்: லீக் பட்டத்துக்கான போட்டி யிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று ஆர்சனல் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் காண்பித்துள்ளது லீக் பட்டியலின் இரண்டாம் நிலையில் இருக்கும் ஸ்பர்ஸ் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சனல் 2=2 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது. இதன் வாயிலாக ஆர்சனல் 52 புள்ளிகள் பெற்று பட்டியலின் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஸ்பர்ஸ் குழு 55 புள்ளிகள் பெற்றுள்ளது. எதிரணியின் விளையாட்டரங்கில் களமிறங்கிய ஆர்சனல் 39வது நிமிடத்தில் ஏரன் ரேம்சி மூலம் கோல் போட்டு முன்னிலை வகித்தது.

இந்திய அணி மெத்தனமாக இருந்து விடக் கூடாது - டோனி

படம்: ஏஎஃப்பி

மிர்பூர்: டி20 போட்டிகளில் தொடர்ந்து ஆறு ஆட்டங்களாக வெல்ல முடியாத அணியாகத் திகழ்ந்துவரும் இந்திய கிரிக் கெட் அணி, இன்று ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் பங்ளாதேஷை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஆறாவது முறையாகக் கிண்ணம் உயர்த்தும் நம்பிக்கையுடன் இருக்கிறது. ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணியில் ஹர்பஜன் சிங், புவனேஸ்வர் குமார், பவன் நேகி ஆகியோருக்கு வாய்ப்பு தரப்பட்டது. அவர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்த போதும் இன்றைய ஆட்டத்தில் அவர்கள் இடம்பெற வாய்ப்பில்லை.

இளம் கோல்ப் வீரரின் சாதனையால் மெய்சிலிர்த்த டைகர் உட்ஸ்

இளம் கோல்ப் வீரரின் சாதனையால் மெய்சிலிர்த்த டைகர் உட்ஸ்

கோல்ப் விளை­யாட்­டில் உல­கத் தர­வ­ரிசை­யில் முதல் நிலை­யில் இருந்த கோல்ப் வீரர் டைகர் உட்ஸை போல் கொஞ்ச­மும் அலட்­டிக் கொள்­ளா­மல் ஒரே வீச்­சில் பந்தை குழிக்­குள் தள்ளி (ஹோல்= இன்=ஒன்) சாதனை படைக்க முடி­யுமா? முடி­யும் என்று நிரூ­பித்­தி­ருக் கிறார் 11 வய­துச் சிறு­வன். அது­வும் தனது முதல் வீச்­சில் ‘ஹோல்= இன்=ஒன்’ சாதனை படைத்­துள்­ளார் சிறுவன் டெய்­லர் குரோ­ஸி­யர். டெக்­சாஸ் நக­ரில் புதி­தா­கத் திறக்­கப்­பட்ட கோல்ப் விளை­யாட்­டுத் திட­லில் இந்தச் சாதனையை நிகழ்த்­தி­யுள்­ளார் டெய்­லர் குரோ­ஸி­ யர்.

உலகக் கிண்ண துப்பாக்கி சுடும் போட்டியில் ஜாஸ்மினின் முதல் பதக்கம்

துப்­பாக்கி வீராங்கனை ஜாஸ்­மின் செர்

சிங்கப்­பூ­ரின் துப்­பாக்கி வீராங்கனை ஜாஸ்­மின் செர், உல­கக் கிண்ணப் போட்­டி­யில் முதல் பதக்­கத்தை வென்றுள்­ளார். பேங்காக்­கில் துப்­பாக்கி சுடும் விளை­யாட்டு சம்­மே­ள­னத்­தில் நடை­பெற்று வரும் உல­கக் கிண்ணப் போட்­டி­யில் நேற்று முன்­தி­னம் செர் வெண்­க­லப் பதக்­கம் வென் றார். 25 வய­தான வீராங்கனை செர் மொத்தம் 184.6 புள்­ளி­கள் பெற்று மூன்றா­வது இடத்தைப் பிடித்­ துள்­ளார். இந்தப் போட்­டி­யில் சீனா­வின் ஒலிம்­பிக் பதக்க வீராங்கனை யி சிலிங் 207.7 புள்­ளி­கள் எடுத்து முதல் நிலை­யி­லும், ஆஸ்­தி­ரே­லி­யா­வின் ஒலி­வியா ஹோல்ப்­மண் இரண்டா­வது நிலை­யி­லும் வென்­றுள்­ள­னர்.

பார்சலோனா சாதனை

ஸ்பெ­யி­னின் மட்­ரிட் நக­ரின் வேலி­காஸ் விளை­யாட்டு மைதா­னத்தில். படம்: ராய்ட்டர்ஸ்

லய­­­னல் மெஸ்­­­ஸி­­­யும் அவ­­­ரது பார்சலோனா காற்­­­பந்­­­துக் குழு­­­வும் நேற்று முன்­­­தி­­­னம் மட்­­­ரிட்­­­டில் நடந்த ஆட்­­­டத்­­­தில் ராயோ வெலி­­­க­­­னோவை 5=1 என்ற கோல்­­­க­­­ணக்­­­கில் வென்று சரித்­­­தி­­­ரம் படைத்­­­துள்­­­ள­­­னர். தொடர்ந்து 35 ஆட்டங் களில் தோல்விபெறாமல் புதிய ஸ்பானிய சாதனையை பார்சலோனா படைத்துள் ளது. இதன் மூலம் ரியல் மட்­­­ரிட்­­­டின் 30 ஆண்­­­டு­­­களுக்கு முந்தைய சாத னையை பார்­­­சி­­­லோனா குழு முறி­­­ய­­­டித்­­­துள்­­­ளது.

இங்கிலிஷ் பிரிமியர் லீக்: அதிர்ச்சி இரவு

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் முன்னணி காற்பந்துக் குழுக்களுக்கு நேற்று முன்தினம் இரவு பெரும் அதிர்ச்சி தரும் வகையில் அமைந்தது. டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர், ஆர்சனல், மான்செஸ்டர் சிட்டி என பட்டியலில் முறையே இரண்டு, மூன்று, நான்காம் நிலைகளில் இருக்கும் குழுக்கள் தங்களது ஆட்டங்களில் தோற்றுப் போயின. இந்த முடிவுகள், அதற்கு முதல் நாள் இரவு வெஸ்ட் புரோம் குழு வுடன் சமன் கண்டதால் புலம்பி வந்த லெஸ்டர் சிட்டிக்கு நிம்மதி அளிப்பதாக இருந்தன.

கரம் இல்லாதபோதும் சிகரம் நோக்கி...

தமது கழுத்திற்கும் இடது தோளுக்கும் இடையில் மட்டையை வைத்துப் பந்தடிக்கும் அமீர்

ஜம்மு: தமக்கு எட்டு வயதாக இருந்தபோது வாழ்வின் மிகப் பெரிய சோகத்தை எதிர் கொண்டார் அமீர் ஹுசைன், 26 (படம்). தம் தந்தையின் மர ஆலையில் நிகழ்ந்த விபத்தில் இரு கைகளையும் இழந்தார். ஆனாலும், அந்தப் பேரிடர் இவரது தன்னம்பிக்கையைத் துளியும் சிதைக்க வில்லை. கிரிக்கெட் விளையாட்டு மீதான ஆர்வம் எப்போதும் போலவே மனதில் குடியிருந்தது. இப்போது ஜம்மு=காஷ்மீர் மாநில உடற்குறையுள்ளோருக்கான கிரிக்கெட் அணியின் தலைவராக உயர்ந்திருக்கிறார் அமீர் ஹுசைன்.

வெற்றியை நழுவவிட்ட லெஸ்டர்

படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்த லெஸ்டர் சிட்டியை ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் ஃப்ரீ கிக் வாய்ப்பு மூலம் வெஸ்ட் பிரோம்விச் குழு வின் கிரேக் கார்ட்னர் போட்ட கோல் தடுத்து நிறுத்தியது. இதன் விளைவாக லெஸ்டர் சிட்டிக்கும் வெஸ்ட் பிரோம் விச்சுக்கும் இடையிலான ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் வெஸ்ட் பிரோம்விச் அதன் முதல் கோலை போட்டது. லெஸ்டர் சிட்டியின் தற்காப்பை உதறித் தள்ளிய சாலமன் ரொன்டன் பந்தை வலைக்குள் சேர்த்தார்.

Pages