You are here

விளையாட்டு

சச்சின் மகளுக்குத் தொல்லை தந்த ஆடவர் கைது

இந்திய முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவுக்குத் தொலைபேசி வழியாகத் தொல்லை கொடுத்த ஆடவர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். தம்முடைய மனைவி அஞ்சலி, மகள் சாரா, மகன் அர்ஜுன் ஆகி யோருடன் மும்பையில் வசித்து வருகிறார் சச்சின். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தேப்குமார் மைத்தி, 32, என்ற ஆடவர் சச்சி னின் வீடு, அலுவலகத் தொலை பேசி எண்களுக்குக் கடந்த ஒரு வாரத்தில் 25 முறை அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.

பார்சிலோனா காற்பந்துக் குழுவில் கொட்டின்யோ

பிரேசில் விளையாட்டாளர் பிலிப் கொட்டின்யோ

லண்டன்: லிவர்பூல் நட்சத்திரமான பிரேசில் விளையாட்டாளர் பிலிப் கொட்டின்யோ (படம்) கடைசி இரண்டு ஆட்டங்களில் தனது குழுவிற்காக களமிறங்காத நிலையில், அவர் பார்சிலோனா குழுவிற்குச் செல்வதைச் சம்பந்தப்பட்ட இரு குழுக்களும் உறுதி செய்துள்ளன. கொட்டின்யோவை 142 மில்லியன் பவுண்டுகளுக்கு (S$250 மில்லியன்) பார்சிலோனா வாங்குவதாக பிரிட்டிஷ் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் காற்பந்து வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் இவர் மூன்றாவது இடம்பிடிக்கிறார்.

சிட்டியின் கடைசி நேர வெற்றி

படம்: ஏஎஃப்பி

மான்செஸ்டர்: பர்ன்லி காற்பந்துக் குழுவை முதல் கோல் போட விட்டுவிட்டாலும் பிற்பாதி ஆட்டத் தின்போது கோல் மழை பொழிந்து எஃப்ஏ கிண்ணக் காற்பந்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது மான்செஸ்டர் சிட்டி. ஜான் ஸ்டோன்ஸ் உதைத்த பந்து தவறுதலாக பர்ன்லியின் ஆஷ்லே பர்னேஸிடம் செல்ல அவர் அதைக் கோலாக மாற்றி விட்டார். இதனால் 25வது நிமி டமே பர்ன்லி முன்னிலை பெற் றது. அதை சமன் செய்ய சிட்டிக்கு நீண்ட நேரம் பிடித்தது.

வெஸ்ட் ஹேமிடம் சமநிலை கண்ட டோட்டன்ஹம்

வெம்பிளே: வெஸ்ட் ஹேம் காற் பந்துக் குழுவிடம் சமநிலை கண்டு ஏமாற்றமடைந்தது டோட் டன்ஹம் ஹாட்ஸ்பர். நேற்று அதிகாலை நடந்த இந்த ஆட்டத்தில் டோட்டன்ஹம் ஆதிக்கம் செலுத்தினாலும் அவர் களால் வெஸ்ட் ஹேமின் தற் காப்பைத் தாண்டி கோல் போட முடியவில்லை. வெஸ்ட் பிரோமிற்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு கோல்களைப் போட்ட ஆண்டி கரோல் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் களமிறங்காத நிலையில், டோட்டன்ஹம்மிடம் தோற்றுவிடக் கூடாது என்று உறுதியாக இருந்த அதன் நிர்வாகி டேவிட் மோயஸ், அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.

 

சமநிலையில் முடிந்த பரபரப்பான ஆட்டம்

படம்: ஏஎஃப்பி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் இரு முன்னணி குழுக்கள் நேற்று முன்தினம் பின்னிரவு பொருதிய ஆட்டம் சமநிலையில் முடிந்தபோதும் அந்த ஆட்டம் காற்பந்து ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது. ஆர்சனல் குழுவின் சொந்த அரங்கில் அதை எதிர்கொண்டது செல்சி குழு. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலிருந்தே இரு குழுக் களும் சரமாரியாக தாக்குதல் களை முடுக்கிவிட்டன.

இந்தியாவுக்கு சவால் விடும் தென்னாப்பிரிக்க வீரர் வெரோன் ஃபிலாண்டர்

 வெரோன் ஃபிலாண்டர்

கேப்டவுன்: சொந்த மண்ணிலேயே வெற்றிகளைக் குவித்து வரும் இந்தியா அந்நிய மண்ணில் சாதிக்க முடியுமா என சவால் விடுத்துள்ளார் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வெரோன் ஃபிலாண்டர் (படம்)கூறியுள்ளார். “இந்திய அணி அண்மை காலமாக அதிகமான போட்டி களைச் சொந்த நாட்டில்தான் விளையாடி இருக்கிறது. எனவே தென்னாப்பிரிக்க மண்ணில் அந்த அணி எந்த மாதிரி விளையாடப் போகிறது என்பதைப் பார்க்கவே சுவாரஸ்யமாக இருக்கும்.

ஆஸ்திரேலியத் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் அணி- யின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (படம்). இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதி ரான மூன்றாவது ஒருநாள் போட்டி யில் வென்றதும், பிரிஸ்டோலில் உள்ள இரவு விடுதிக்கு தனது நண்பர்- களுடன் சென் றார். அப்போது பென் ஸ்டோக்ஸ் ஒரு வாலிபரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் பென் ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப் பட்- டார். இதனால் போலிசார் வழக்- குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அபாரமான இரு கோல்களால் வீழ்ந்தது எவர்ட்டன் அணி

லண்டன்: மான்செஸ்டர் யுனை- டெட் டின் ஆண்டனி மார்சியல், ஜெஸ்ஸி லிங் கார்ட் ஆகிய இருவரும் போட்ட அபாரமான இரு கோல்களால் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் நேற்று நடைபெற்ற காற் பந்தாட்டம் ஒன்றில் எவர்ட்டன் குழு 0=2 என்ற கோல் எண் ணிக் கையில் யுனைடெட்டிடம் தோல்வியைத் தழுவி யது. பிரிமியர் லீக்கில் கடந்த மூன்று ஆட்டங்களில் சம நிலை மட்டுமே காண முடிந்த மான்செஸ்டர் யுனை- டெட்டுக்கு நேற்றைய ஆட் டம் ஒரு சோதனையாகவே முதலில் தோன்றி யது. முதல் பாதி ஆட் டத்தில் சிறந்த தாக்குதல் ஆட் டத்தைத் தொடுத்த போதிலும் யுனை டெட் டால் எவர்ட்டனின் தற் காப்பு அரணை தகர்க்க முடிய வில்லை.

முடிவுக்கு வந்தது சிட்டியின் தொடர் வெற்றி

படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: இங்கிலிஷ் °பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டியலில் முன்னி லையில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது கிரிஸ்டல் பேலஸ் காற்பந்துக் குழு. கடந்த ஆகஸ்ட் மாதம் எவர்ட் டனிடம் 1=1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்ட சிட்டி, கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து இப்போதுதான் பேலசிடம் 0=0 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டு உள்ளது. இவ்விரு ஆட்டங்களுக்கு இடையே நடந்த 18 ஆட் டங்களிலும் சிட்டி தொடர் வெற்றி பெற்று வந்தது.

யுனைடெட் வீரருக்குத் தடை

மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழு வீரர் ஆஷ்லி யங்கிற்கு மூன்று ஆட்டங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சௌத்ஹேம்டன் குழுவிற்கு எதிராக விளையாடியபோது, யங், எதிரணி வீரர் டுசன் டாடிக்கை தாக்க முற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவருக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனது தவற்றை யங் ஒப்புக் கொண்டாலும் மூன்று ஆட்டங் கள் தடை செய்யப்பட்டது அதி கம் என்று கூறியுள்ளார். எவர்ட்டனுக்கு எதிரான ஆட்டம் உட்பட எஃப்ஏ கிண்ண ஆட்டம், ஸ்டோக்கிற்கு எதிரான லீக் ஆட்டத்திலும் யங் விளையாடமுடியாது.

Pages