You are here

விளையாட்டு

வாள் வீச்சில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிங்கப்பூர் பெண்கள்

படம்: அனைத்துலக வாள் வீச்சு சம்மேளனம்

வெரோனா (இத்தாலி): இத்தாலி­யில் நேற்று முன்தினம் நடந்த இளையர் மற்றும் பயிற்சி மாணவர்களுக்கான உலகக் கிண்ண மகளிர் வாள் வீச்சுப் போட்டியில் சிங்கப்பூர்ப் பெண்கள் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர். பதிமூன்றாவது இடத்தில் இருந்த சிங்கப்பூர் வாள் வீச்சு வீரர்கள் நான்காவது இடத்தில் உள்ள போலந்து, ஐந்தாவது இடத் தில் உள்ள பிரான்ஸ், எட்டாவது இடத்தில் உள்ள ஜெர்மனி ஆகிய அணிகளை எதிர்கொண்டு இறுதி ஆட்டம் வரை சென்றது. இருப்பினும் தங்கப் பதக்­கத்தை அமெரிக்க விளையாட்டாளர்­ களிடம் 30-45 என்ற புள்ளிக் கணக்கில் கோட்டை விட்டது.

25மீ. துப்பாக்கி சுடும் போட்டியில் 5வது இடத்தைப் பிடித்து வெளியேறிய சிங்கப்பூரர்

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் மகளிருக்கான 25 மீட்டர் குறி பார்த்து துப்பாக்கி சுடும் இறுதிப் போட்டியில் சிங்கப்பூரின் டெ ஸியூ ஹோங் 5வது இடத்தைப் பிடித் துள்ளார். தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று 8 பேர் பங்குபெற்ற இறுதிப் போட்டியில் காலடியெடுத்து வைத்த 24 வயது தே ஸியூ ஹோங் இறுதிப் போட்டியில் நடந்த தகுதியிழப்புச் சுற்றில் முன்­னேற முடியவில்லை. நான்காவது போட்டியாளராக விளையாடிய தே, மால்ட்டாவின் எலெனோர் பெஸ்ஸி­னா­விடம் தோற்று 19 புள்ளிகளுடன் வெளி­யேற்றப்பட்டார்.

‘மூத்த வீரர்களைச் சுந்தரம் சரிவரப் பயன்படுத்தவில்லை’

தேசிய காற்பந்து தலைமைப் பயிற்றுநர் பதவியிலிருந்து சுந்தரமூர்த்தி விலக வேண்டிய கட்டாயம் வந்ததற்கு அவர் மூத்த வீரர்களைச் சரிவரப் பயன்படுத் தாததுதான் என்று கூறப்படுகிறது. எஸ்லீக் காற்பந்துப் போட்டி களில் 2016ஆம் ஆண்டு அதிக கோல்களைப் போட்ட ஃபாரீஸ் ஃபார்ஹான் என்ற வீரர் தேசிய காற்பந்துப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பில்லாமல் இருந்ததை இதற்கு உதாரணமாக எடுத்துக் காட்டப்படுகிறது.

ஐபிஎல்: கேதர் ஜாதவ் விலகல்

சென்னை: மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் 11வது சீசன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் = சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. நான்காவது வீரராக களம் இறங்கிய கேதர் ஜாதவ் ஹாம்ஸ்ட்ரிங் காயத்தால் அவதிப்பட்டார். இதனால் 13வது ஓவரில் மைதானத்தில் ‘ரிட்டையர்டு ஹர்ட்’ மூலம் வெளியேறினார். 4வது பந்தில் சிக்ஸ் விளாசிய கேதர் ஜாதவ், ஐந்தாவது பந்தில் பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றிபெற வைத்தார். ஆட்டம் முடிந்த பின்னர் கேதர் ஜாதவின் காயம் குறித்து ஆராயப்பட்டது. அப்போது காயத்­தின் வீரியம் ஹாம்ஸ்ட்ரிங்கின் 2வது கிரேடு எனத் தெரியவந்தது.

ஹீனா மீண்டும் பதக்கம் பெற்றார்

சிட்னி: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்தி­ரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்து வருகின்றன. இந்தியா 10 தங்கப்பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்து வரும் நிலையில் நேற்று 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்தன. இதன் மூலம், காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு 11வது தங்கம் கிடைத்துள்­ளது. இதில் ஹீனா சித்து தங்கம் வென்றார். இவர் ஏற்கெனவே 10மீ. ‘ஏர் ரைபிள்’ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரே காமன்வெல்த் போட்டித்தொடரில் 2 பதக்கங்கள் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

தேசிய காற்பந்து தலைமைப் பயிற்றுநர் பொறுப்பிலிருந்து வி.சுந்தரமூர்த்தி விலகல்

சிங்கப்பூர் தேசிய காற்பந்து அணியின் தலைமைப் பயிற்று நர் பொறுப்பிலிருந்து வி.சுந்தர மூர்த்தி விலகிவிட்டார். அவர் அந்தப் பொறுப்பில் கிட்டத்தட்ட ஈராண்டுகள் இருந்தார். அவர் பதவி விலகும் முடிவு இருதரப்பு ஒப்புதலின் பேரில் எடுக்கப்பட்டதாக சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் நேற்று வெளி யிட்ட அறிக்கையில் தெரிவித் தது. தமது முடிவு குறித்து கருத்துத் தெரிவித்த சுந்தர மூர்த்தி, 52, “தேசிய காற்பந்து அணியை வழிநடத்த கிடைத்த வாய்ப்பு எனக்குக் கிடைத்த கௌரவம். அணியினருடனும் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத் தின் எனது சகாக்களுடனும் இணைந்து பணியாற்றியது நேசத்துடன் நினைத்துப் பார்க்க வேண்டிய அனுபவம்.

சிங்கப்பூரின் தங்க மகள் மார்ட்டினா லிண்ட் சே வெலோசா

 படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோல்டு கோஸ்ட்: ஆஸ்திரேலி யாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் அதன் முதல் தங்கப் பதக்கத்தை நேற்று வென்றது. மகளிருக்கான 10 மீட்டர் குறி பார்த்துத் துப்பாக்கிச் சுடும் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை மார்ட்டினா லிண்ட் சே வெலோசா, 18, வென்று முதலாவதாக வந்தார். அவரிடம் தோல்வியுற்ற இந்தியாவின் மெஹுலி கோஷ், 17, வெள்ளிப் பதக்கமும் மற்றோர் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா வெண்கலப் பதக்கமும் பெற்றனர். வெலோசா 10.3 புள்ளிகளும் கோஷ் 9.9 புள்ளிகளும் பெற்று அடுத்தடுத்த நிலையை அடைந் தனர்.

மகுடம் சூடிய இந்தியப் பூப்பந்து அணி

படம்: ராய்ட்டர்ஸ்

கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் போட்டியின் கலப்பு அணி பூப்பந்தில் இந்தியா முதல் முறையாக நேற்று தங்கம் வென்று வரலாறு படைத்தது. பலம் பொருந்திய மலேசியா அணியை எதிர்கொண்ட இந்தியா, கடுமையாகப் போராடி 3-1 என வாகை சூடியது. முதல் ஆட்டத்தில் மலேசியா வின் பெங் சூன் சான்-லியூ யிங் கோ ஜோடியை இந்தியா வின் ரன்கிரெட்டி=அஸ்வின் பொன்னப்பா ஜோடி 21-14, 15-21, 21-15 எனும் புள்ளிக் கணக்கில் தோற்கடித்தது.

வெண்கலம் வென்ற சிங்கப்பூர் நீச்சல் வீரர்

டோ வெய் சூங்

கோல்டு கோஸ்ட்: சிங்கப்பூரின் உடற்குறையுள்ள நீச்சல் வீரரான டோ வெய் சூங் (படம்) காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி களில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார். காமன்வெல்த் போட்டிகளில் அவர் பங்கெடுப்பது இதுதான் முதல்முறை. ஆண்களுக்கான எஸ்7 50 மீட்டர் எதேச்சைப்பாணி நீச்சல் போட்டியை 19 வயது டோ 29.83 வினாடிகளில் முடித்து மூன்றாவது இடத்தைப் பிடித் தார்.

சிதறியது சிட்டியின் கனவு

மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனை டெட்டை எளி தில் வீழ்த்தி லீக் சாம்பியன் பட்டத்தை வென்று விடலாம் என்று மான்செஸ்டர் சிட்டி கண்ட கனவை பால் போக்பா சிதைத்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். முதல் பாதியில் இரண்டு கோல் களுடன் வெற்றிக்களிப்பில் மிதந்து கொண்டு இருந்த சிட்டியின் ஆட் டக்காரர்கள் இரண்டாம் பாதியில் அந்தக் களிப்பு பறிபோகும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. காரணம், அணித் தலைவர் வின்சென்ட் கொம்பானியும் இல்கே குண்டோகனும் முறையே 25வது, 30வது நிமிடங்களில் ஆளுக்கு ஒரு கோல் போட்டு சிட்டியை வெற்றியின் விளிம்பில் வைத்தி ருந்தனர்.

Pages