You are here

விளையாட்டு

தங்கம் வென்ற 16 வயதுப் பெண்

கோல்ட் கோஸ்ட்: ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் நேற்று மகளிருக்கான ‘10 மீட்டர் ஏர் ரைபிள்’ துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பகேர் தங்கப் பதக்கமும் ஹீனா சித்து வெள்ளிப் பதக்கமும் வென்றனர். மேலும், மகளிருக்கான 69 கிலோ எடைப்பிரிவு பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா இதுவரை ஆறு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. மனு பகேருக்கு 16 வயதுதான் ஆகிறது. சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஜூனியர் உலகக் கிண்ணப் போட்டியிலும் அவர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது

தங்கம் வென்றார் தமிழகத்தின் சதீஷ்குமார்

கோல்டு கோஸ்ட்: ஆஸ்திரேலியா வில் நடைபெற்று வரும் காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி களில் தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம், 25, தங்கம் வென்று, இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார். கிளாஸ்கோவில் 2014ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டிகளில் 77 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றவரான சதீஷ், இம்முறையும் தங்கத்தைத் தட்டிச் சென்றார். ‘ஸ்நாட்ச்’ பிரிவின் மூன்று முயற்சிகளில் 136 கிலோ, 140 கிலோ, 144 கிலோ எடையையும் ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ பிரிவில் முதலிரு முயற்சிகளில் 169 கிலோ, 173 கிலோ எடையையும் இவர் வெற்றிகரமாகத் தூக்கினார்.

‘போக்பாவை விற்கும் எண்ணமில்லை’

மான்செஸ்டர்: பிரெஞ்சு காற்பந்து வீரர் பால் போக்பாவை (படம்) மான்செஸ்டர் சிட்டி குழுவிற்கு விற்பது குறித்து யோசிக்கவில்லை என்று மான்செஸ்டர் யுனைடெட் குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் சொன்னதாக ‘ஈஎஸ்பிஎன்’ செய்தி கூறுகிறது. கடந்த ஜனவரியில் போக்பாவையும் அப்போதைய யுனைடெட், இன்றைய ஆர்சனல் வீரரான மகிதார்யானையும் ஒப்பந்தம் செய்ய சிட்டிக்கு வாய்ப்பு கிட்டியதாக அதன் நிர்வாகி கார்டியோலா நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

இந்தியா-சிங்கப்பூர் மோதல்

கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் போட்டிகளை ஏற்று நடத்தும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, பூப்பந்து விளையாட்டின் அரை இறுதிக்கு முன்னேறியது சிங் கப்பூர் குழு. அரையிறுதியில் சிங்கப்பூரும் இந்தியாவும் இன்று மோதவிருக்கின்றன. முதலில் நடந்த கலப்பு இரட் டையர் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வின் மேத்யூ சுவா - சேத்யானா மபாசா இணை கடும் சவால் அளித்தாலும் இறுதியில் வெற்றி டெரி ஹீ-டான் வெய் ஹான் இணை வசமாகியது. செட் விவரம்: 21-17, 18-21, 21-16.

ஆர்சனல் அபாரம்

லண்டன்: ஏரன் ராம்சியும் அலெக்சாண்டர் லக்காஸெட்டும் ஆளுக்கு இரு கோல்களை அடிக்க, யூரோப்பா லீக் காற்பந்து காலிறுதிச் சுற்று முதல் ஆட்டத் தில் ஆர்சனல் குழு 4=1 என்ற கோல் கணக்கில் சிஎஸ்கேஏ மாஸ்கோ குழுவை மண்ணைக் கவ்வச் செய்தது. ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் ராம்சி, ஆர்சனலின் கோல் வேட் டையைத் தொடங்கி வைத்தார். முற்பாதியின் 35 நிமிடங்களுக்கு உள்ளாக ஐந்து கோல்களும் விழுந்தன. முதல் பாதியில் பிரமிக்க வைக்கும்படியாக விளையாடிய ஆர்சனல், பிற்பாதியில் மேலும் கோலடிக்க முடியாமல் போனது ஏமாற்றம் தருவதாக இருந்தது.

வென்றால் பட்டம் சிட்டி வசம்

மான்செஸ்டர்: இன்றிரவு நடக்கும் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனை டெட் குழுவைத் தோற்கடித்து, இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத் தைக் கைப்பற்றி, சாம்பியன்ஸ் லீக்கில் லிவர்பூலிடம் தோற்றதால் கிட்டிய வலியைப் போக்கும் முனைப் புடன் மான்செஸ்டர் சிட்டி குழு இருக்கிறது. பின்னிரவு 12.30 மணிக்குத் தொடங்கும் ஆட்டத்தை வெல்லும் பட்சத்தில் இபிஎல்லின் 26 ஆண்டு கால வரலாற்றில் அதிவேகமாக, அதாவது ஆறு ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் பட்டம் வென்ற குழு என்ற சாதனையை சிட்டி படைக்கும்.

கிளோப்பை வீழ்த்த கார்டியோலா வியூகம்

லிவர்பூல்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடரின் காலிறுதி ஆட்டத்தின் முதல் சுற்றில் ஐரோப்பாவின் மிகச்சிறந்த குழுக் கள் பட்டியலில் உள்ள லிவர்பூலும் மான்செஸ்டர் சிட்டியும் மோதுகின் றன. லிவர்பூலின் ஆன்ஃபீல்ட் மைதானத்தில் சிங்கப்பூர் நேரப்படி நாளை அதிகாலை 2.45 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. ஆனால் இந்த ஆட்டம் இரு குழுக்களின் நிர்வாகிகளான கிளோப்பிற்கும் கார்டியோலாவிற் கும் இடையேயான மோதலாகவே பார்க்கப்படுகிறது.

கால் இல்லா கோல்காப்பாளர்

காற்பந்து விளையாட கால்கள் முக்கியம் எனும் மரபை உடைத்து எறிந்துள்ளார் இந்தோனீசிய கோல்காப்பாளர். பிறக்கும் போதே கால்கள் இல்லாமல் பிறந்த எமான் சுலைமான், காற்பந்தின் மீது கொண்ட காதலாலும் விடாமுயற்சியாலும் தற்போது கோல்காப்பாள ராக உருவெடுத்துள்ளார். அண்மையில் உள்ளூரில் நடந்த ஃபுட்சால் ஆட்டம் ஒன்றில் தன்னை நோக்கி வந்த பந்தை 30 வயது சுலை மான் திருப்பி உதைக்க அது எதிரிணியின் வலைக்குள் சென்றது. இதனால் அவரது அணி வெற்றி பெற்றது. படம்: ஏஎஃப்பி

ஸ்மித்: மேல்முறையீடு செய்யப்போவதில்லை

சிட்னி: பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி, கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை விதிக்கப் பெற்ற ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், அந்தத் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை எனத் தெரிவித்து உள்ளார். “தடை விதித்ததன் மூலம் தவறிழைப்போர் கடுமையாக தண் டிக்கப்படுவர் என்பதை ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் சங்கம் உணர்த் தியுள்ளது. அதனால், அதை எதிர்த்து நான் மேல்முறையீடு செய்யமாட்டேன்,’ என்று ஸ்மித் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஊதியம் முழுவதையும் நன்கொடையாக அளித்த சச்சின்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவிக் காலத்தின் போது பெற்ற ஊதியத்தையும் சலுகைத் தொகைகளையும் பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கி விட்டார். கடந்த ஆறு ஆண்டுகளில் சச்சினுக்கு எம்.பி. ஊதியம், சலுகைத் தொகை என கிட்டத்தட்ட 90 லட்ச ரூபாய் (S$181,270) அளிக்கப்பட்டது. சச்சினின் இந்தச் செயலை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். “சச்சின் டெண்டுல்கரின் இந்த நற்செயலுக்கு பிரதமர் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறார்.

Pages