You are here

விளையாட்டு

ஊக்கமருந்து உட்கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் ஊக்கமருந்து உட் கொண்டது சோதனையில் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக உலக ஊக்கமருந்துத் தடுப்பு நிறுவனத் தின் அறிக்கை கூறுகிறது. அதே நேரத்தில் அவர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தில் பதிவு செய் துள்ள கிரிக்கெட் வீரர்களில் 138 பேரிடம் கடந்த ஆண்டு போட்டி களின்போது ஊக்கமருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், போட்டியில் விளையா டாத 15 பேரின் சிறுநீர், ரத்த மாதிரிகளும் சோதனைக்கு எடுத் துக்கொள்ளப்பட்டன.

மீண்டுவந்த வெஸ்ட் ஹேம்

மீண்டுவந்த வெஸ்ட் ஹேம்

லண்டன்: லண்டனின் வெம்பிளி அரங்கில் நேற்று அதிகாலை நடைபெற்ற இங்கிலிஷ் லீக் காற்பந்து போட்டி ஒன்றில் முதல் பாதி ஆட்டத்தில் 0=2 என்று பின்னடைவு கண்ட வெஸ்ட்ஹேம் குழு பின்னர் இரண்டாம் பாதி ஆட்டத்தில் அதை சரியான முறையில் ஈடுகட்டியதோடு அல்லாமல் எதிர்த்து விளையாடிய ஸ்பர்ஸ் குழுவை அப்படியே புரட்டிப் போட்டு இறுதியில் 3=2 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கிய ஆறாவது நிமிடத்திலேயே ஸ்பர்ஸ் குழுவின் சோன் யிங் மின் தந்த பந்தை கோல் வலைக்குள் செலுத்தி வெஸ்ட் ஹேம் குழுவை அதிர்ச் சிக்குள்ளாக்கியுள்ளனர் மூசா சிசோக்கோ.

பொதுவிருதுப் பூப்பந்து: முதல் சுற்றில் சாய்னா, சிந்து வெற்றி

சிந்து

பூப்பந்துத் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்- றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் எச். எஸ்.பிரனோய், கொரியாவின் லீ ஹியூனை எதிர்த்து விளை- யாடினார். இப்போட்டியின் முதல் சுற்றை 21=15 என்ற புள்ளிக் கணக்கில் பிரனோய் கைப்பற்றி னார். அடுத்த சுற்றிலும் சிறப்பாக விளையாடிய பிரனோய் இரண் டாவது சுற்றையும் 21-19 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதன்மூலம் 21-15, 21-19 என்ற நேர் செட்களில் எச்.எஸ். பிரனோய் வெற்றி பெற்றார்.

இந்தியா வெற்றி: புவனேஷ்வர்குமார், பும்ராவுக்கு விராத்கோஹ்லி பாராட்டு

புனே: நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. புனேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளை- யாடிய நியூசிலாந்து அணியால் 50 ஓவர் களில் 9 விக்கெட் இழப்புக்கு 230 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. நிக் கோலஸ் அதிகபட்சமாக 42 ஓட்ட மும், கிராண்ட்ஹோம் 41 ஓட்டங் களும் எடுத்தனர். புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும், பும்ரா, சகால் தலா 2 விக்கெட்டும் எடுத் தனர். பின்னர் விளையாடிய இந் திய அணி 46 ஓவர்களில் 4 விக் கெட் இழப்புக்கு 232 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றி தேடித் தந்த பிராவோ

மான்செஸ்டர்: லீக் கிண்ணக் காற்பந்தில் மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவை கோல் எது வும் போடவிடாமல் தடுத்து விளை யாடிய உல்ஃப்ஸ் குழு பெனால்டி ‌ஷூட்அவுட் முறையில் தோல்வி அடைந்தது. எதிரணியின் மூன்று கோல் களைத் தடுத்தாடிய சிட்டியின் கோல்காப்பாளர் கிளாடியோ பிராவோ தன் அபார ஆட்டத் திறனை வெளிப்படுத்தினார். உல்ஃப்ஸ் வீரர் ஹெல்டர் கோஸ்டா உதைத்த பந்தையும் பிரைட் எனோபக்ஹரே உதைத்த பந்தை இரண்டு முறையும் பிராவோ தடுத்துவிட்டார். அதே போல் உல்ஃப்ஸ் குழுவும் சிட்டி குழுவை கோல் போடவிடாமல் சிறப்பாக தடுத்து விளையாடியது.

நிரந்தர நிர்வாகியாக விரும்பும் அன்ஸ்வர்த்

படம்: ஏஎஃப்பி

எவர்ட்டன்: எவர்ட்டன் காற்பந்துக் குழுவின் நிரந்தர நிர்வாகியாக விரும்புவதாக டேவிட் அன்ஸ்வர்த் தெரிவித்துள்ளார். ரோனல்ட் கூமன் எவர்ட்டன் குழுவின் நிர்வாகிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அக்குழுவின் ‘கேர் டேக்கர்’ எனும் தற்காலிக பொறுப்பில் நிய மிக்கப்பட்டார் 44 வயது டேவிட் அன்ஸ்வர்த். 23 வயதுக்குட்பட்டோருக்கான எவர்ட்டன் குழுவின் நிர்வாகியாகப் பொறுப்பு வகித்து வரும் இவர், எவர்ட்டன் குழுவின் முன்னாள் தற்காப்பு ஆட்டக்காரராகவும் இருந்து உள்ளார்.

சிறந்த வீரராக ரொனால்டோ

படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: போர்ச்சுகல் அணித் தலைவரும் ரியால் மட்ரிட் காற் பந்துக் குழுத் தலைவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, இவ்வாண்டுக்கான அனைத்துலக காற்பந்து சம்மேளனத்தின் (ஃபிஃபா) சிறந்த காற்பந்து வீரர் விருதை வென்றார். இந்த ஆண்டில் இதுவரை 44 போட்டிகளில் விளையாடியிருக்கும் ரொனால்டோ 48 கோல்களை அடித்துள்ளார். கடந்த பருவத்திற் கான ஸ்பானிய லா லீகா பட்டத் தையும் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை யும் ரியால் மட்ரிட் குழு கைப் பற்றியதில் ரொனால்டோவுக்கு பெரும்பங்குண்டு.

எவர்ட்டன் நிர்வாகியாக விருப்பம்

படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: மான்செஸ்டர் யுனை டெட் காற்பந்துக் குழுவின் முன் னாள் ஆட்டக்காரரான ரையன் கிக்ஸ் காலியாக உள்ள எவர்ட்டன், லெஸ்டர் சிட்டி நிர்வாகிப் பதவி மீது குறிவைத்துள்ளார். கடந்த ஞாயிறன்று நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத் தில் 5=2 என்ற கணக்கில் ஆர்சனலிடம் எவர்ட்டன் தோல்வி கண்டது. இதனால், ‘ரெலிகேஷன்’ எனப்படும் கடைசி மூன்று இடங் களுக்குள் எவர்ட்டன் தள்ளப் பட்டது. இதையடுத்து, அக்குழுவின் நிர்வாகிப் பொறுப்பிலிருந்து ரோனல்ட் கூமன் நேற்று முன்தினம் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்தப் பருவத்தில் பதவி பறிக்கப்பட்ட மூன்றாவது இபிஎல் நிர்வாகி கூமன்.

5வது போட்டியிலும் இலங்கை தோல்வி

ஷார்ஜா: டெஸ்ட் தொடரை வென்று பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்த இலங்கை அணி, அடுத்து நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரில் படுமோசமாக விளையாடி அவமானப்பட்டது. முதல் நான்கு போட்டிகளிலும் தோற்ற இலங்கை அணி நேற்று முன்தினம் நடந்த ஐந்தாவது, கடைசி ஆட்டத்திலாவது வென்று ஆறுதலடையும் நம்பிக்கையில் இருந்தது. மாறாக, அந்தப் போட்டியில் இன்னும் மோசமாகச் செயல் பட்டு 5-0 என முற்றிலுமாகத் தொடரைப் பறிகொடுத்தது.

தற்காப்பில் தவறிய லிவர்பூல்; வாகை சூடிய டோட்டன்ஹம்

படம்: ஏஎஃப்பி

வெம்பிளே: வெம்பிளே மைதானத் தில் நடந்த ஆட்டத்தில் லிவர்பூல் குழுவின் மோசமான தற்காப்பு ஆட்டத்தைத் தங்களுக்குச் சாதக மாகப் பயன்படுத்திக் கொண்ட டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டமொன்றில் லிவர் பூலை எதிர்கொண்ட ஸ்பர்ஸ் வீரர்கள் வெம்பிளே ஆடுக ளத்தைத் தங்களது சொந்த மைதா னமாக உணரத் தொடங்கிவிட் டார்கள் என்றார் அதன் நிர்வாகி மௌரிசியோ போக்கெட்டினோ.

Pages