You are here

விளையாட்டு

ஆர்சனல் இறுதிக்குத் தகுதி

லண்டன்: சொந்த எமிரேட்ஸ் விளையாட்டரங்கில் நேற்று அதி காலை நடந்த செல்சி குழுவிற்கு எதிரான லீக் கிண்ண அரையிறுதி இரண்டாம் சுற்று ஆட்டத்தில் 2=1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வெற்றி பெற்றது. அரையிறுதி முதல் சுற்று ஆட்டம் கோலின்றி முடிந்ததால் ஒட்டுமொத்த கோல் கணக்கிலும் 2=1 என முன்னிலை பெற்று, எட்டாவது முறையாக லீக் கிண்ண இறுதிப் போட்டிக்கு ஆர்சனல் தகுதி பெற்றது.

லிவர்பூல் அதிர்ச்சி தோல்வி

லண்டன்: லிவர்பூல் குழுவும் சுவான்சி சிட்டி குழுவும் நேற்று முன்தினம் பொருதிய இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி யில் 1-=0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. சுவான்சி சிட்டியின் லிபர்டி விளையாட்டு அரங்கில் நடந்த ஆட்டத்தின் ஒரே கோலை தற்காப்பு ஆட்டக்காரர் அல்ஃபி மவ்சன் போட்டார். சௌத்ஹேம்டன் குழுவில் இருந்து 75 மில்லியன் பவுண்ட்ஸ் ($138 மில்லியன்) தொகைக்கு லிவர்பூல் குழுவிற்கு குழுமாற்றம் பெற்ற தற்காப்பு ஆட்டக்காரர் விர்கில் வேன் டைக் அடித்த பந்து மவ்சனின் வசம் கிடைத்ததை அடுத்து வாய்ப்பை நழுவவிடாமல் 40வது நிமிடத்தில் அவர் வலைக்குள் கோலைப் புகுத்தினார்.

‘ஸ்போர்ட்ஸ் ஹப்’ தலைமை நிர்வாகியாக முன்னாள் தேசிய நீச்சல் வீரர்

சிங்கப்பூர்: ‘சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் ஹப்’பின் புதிய தலைமை நிர்வாகியாக முன்னாள் தேசிய நீச்சல் வீரர் ஊன் ஜின் டெக் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். 1984ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் திரு ஊன் பங்குபெற்றுள்ளார். இதற்கு முன் அந்தத் தலைமைப் பொறுப்பை மனு சௌனி வகித்தார். 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து கடந்த மே மாதம் வரை அவர் ‘ஸ்போர்ட்ஸ் ஹப்’பின் தலைமை நிர்வாகியாகச் செயல்பட்டார். இந்த அமைப்பு, நம் நாட்டின் பொதுத் துறை, தனியார் துறையின் பங்காளித்துவத்தின் ஆகப் பெரிய பிரதிபலிப்பு என்று திரு ஊன் தெரிவித்துள்ளார்.

மான்செஸ்டர் யுனைடெட்டில் சான்செஸ்

லண்டன்: ஆர்சனல் குழுவின் அலெக்சிஸ் சான்செஸ் மான்செஸ் டர் யுனைடெட் குழுவிற்கு குழு மாற்றம் பெறுகிறார். மேன்யூ அணியின் ஹென்ரிக் மிகிதார் யான் ஆர்சனல் குழுவிற்குச் செல்கிறார். இந்தக் குழு மாற்றத் தகவலை நேற்று முன்தினம் மான்செஸ்டர் யுனைடெட் குழு வெளியிட்டது. ஆர்சனல் குழுவில் மூன்றரை ஆண்டுகள் விளையாடியுள்ள சிலி நாட்டைச் சேர்ந்த தாக்குதல் ஆட்டக்காரரான 29 வயது சான் செஸ் உலகின் ஆகப் பெரிய காற்பந்துக் குழுவில் இணைவதில் பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

ரத்தம் சொட்டச் சொட்ட வெளியேறிய ரொனால்டோ

டிபோர்ட்டிவா லா கொருனா குழுவிற்கு எதிரான ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் தலையால் முட்டி தமது இரண்டாவது கோலை அடித்தார் ரியால் மட்ரிட்டின் ரொனால்டோ (வலது). அவரது கோல் முயற்சியின்போது எதிரணி வீரர் பந்தைத் தடுக்க எண்ணி காலை உயர்த்த, அவரது காலணி ரொனால்டோவின் இடது கண் அருகே பட, ஆழமான வெட்டுக் காயமேற்பட்டு ரத்தம் சொட்டியது.

பெர்டிச்சுடன் மோதும் ஃபெடரர்

மெல்பர்ன்: இவ்வாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியப் பொது விருதில் உலகின் 2ஆம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். நான்காம் சுற்று ஆட்டத்தில் ஃபெடரர் 6=4, 7=6, 6=2 என்ற நேர் செட்களில் ஹங்கேரி வீரர் மார்ட்டன் ஃபக்சோவிக்ஸைத் தோற்கடித்தார். காலிறுதி ஆட்டத்தில் தர வரிசையில் 20ஆம் இடத்தில் இருக்கும் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை எதிர்த்தாட உள்ளார் ஃபெடரர்.

சௌத்ஹேம்டன் சரிவிலும் மகிழ்ச்சி

லண்டன்: சொந்த அரங்கில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு வுடன் மோதிய இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டதில் சௌத்ஹேம் டன் குழு நிர்வாகி மௌரிசியோ பெலகிரினோவுக்கு மகிழ்ச்சி. இந்த ஆட்டத்தில் ஒரு புள்ளியை மட்டுமே பெற்றதால் சௌத்ஹேம்டன் குழு முதல் முறையாக 18ஆம் இடத்திற்குக் கீழிறங்கி ‘ரெலிகேஷன்’ நிலைக் குத் தள்ளப்பட்டது. ஆனாலும் அணியினரின் செயல்பாடு முன்னைவிட மேம் பட்டு வருவதால் பெலகிரினோ திருப்தி அடைந்துள்ளார். “ஒரு மாதத்திற்குமுன் ஸ்பர் சிடம் 5=2 என்ற கோல் கணக்கில் மோசமாகத் தோற் றோம்.

மட்ரிட்டை பின்னுக்குத் தள்ளிய வில்லா

மட்ரிட்: லெவான்டே குழுவை 2=1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய வில்லா ரியால் குழு, ஸ்பானிய லா லீகா காற்பந்துத் தொடர் பட்டியலில் 34 புள்ளி களுடன் முதல் நான்கு இடங்களுக்கு முன்னேறியது. இதனால் ஏற்கெனவே 32 புள்ளிகளுடன் இருந்த ரியால் மட்ரிட் 5வது இடத்திற்குக் கீழிறங்கியது. கடந்த வாரம் நடந்த இத் தொடரின் போட்டி ஒன்றில் முதன்முறையாக ரியால் மட்ரிட்டை வில்லா ரியால் வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து தற்போது ரியால் மட்ரிட் முதல் நான்கு இடங்களில் இருந்து கீழிறங்கியதும் அதன் நிர்வாகி ஸினடின் ஸிடானுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.

கார்டியோலா: சிட்டி சாதனை படைக்கும்

லண்டன்: மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு இங்கிலிஷ் பிரி மியர் லீக் தொடரில் அதிக புள்ளி கள் பெற்று சாதனை படைக்கும் என தான் நம்புவதாக கூறியுள்ளார் அதன் நிர்வாகி கார்டியோலா. நேற்று நடந்த போட்டியில் நியூ காசல் குழுவை மான்செஸ்டர் சிட்டி வீழ்த்திய பிறகு பேசிய கார்டியோலா இவ்வாறு கூறினார். ஏற்கெனவே வாட்ஃபர்ட் குழு விற்கு எதிராக ‘ஹாட்-=ரிக்’ கோல் போட்ட அகுவேரோ, நேற்றைய ஆட்டத்தில் இரண்டாவது முறை யாக ‘ஹாட்=ரிக்’ கோல் போட்டார்.

பர்ன்லிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் யுனைடெட்

பர்ன்லி: தனது சொந்த அரங்கி லேயே வெற்றியைத் தடுத்த பர்ன்லி குழுவை பழிதீர்க்கும் முனைப்புடன் உள்ளது மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழு. பர்ன்லியின் சொந்த அரங்கில் இன்று நடக்கும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் அவ்விரு குழுக்களும் மோதவுள்ளன. கடந்த மாதம் இக்குழுக்கள் மோதிய ஆட்டத்தில் கடைசி நேரம் வரை யுனைடெட் இரண்டு கோல்கள் பின்தங்கியே இருந்தது. மாற்று ஆட்டக்காரராக வந்த ஜெசி லிங்கார்ட் போட்ட கோலால் 2=2 என சமநிலை செய்து தோல் வியடையாமல் தப்பித்தது மேன்யூ.

Pages