You are here

விளையாட்டு

இந்திய வீரர்கள் சம்பளம் இருமடங்காகிறது

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குப் பெரிய அளவில் சம்பள உயர்வு கிடைக்க இருக் கிறது. நட்சத்திர வீரர்கள், உள்ளூர் லீக் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் ஆகியோரின் சம்பளம் இரண்டு மடங்கு உயர இருக் கிறது. இதுகுறித்து இந்திய உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள நிர்வாகக் குழு பரிசீலனை செய்து வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்தவேண்டும் என்று இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லியும் பயிற்று விப்பாளர் ரவி சாஸ்திரியும் அண்மையில் கோரிக்கை விடுத் திருந்தனர்.

இங்கிலாந்துக்கு நெருக்குதல் தரும் ஸ்டீவன் ஸ்மித்

பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந் துக்கும் இடையிலான ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா மூன்று விக் கெட்டுகள் இழந்து 203 ஓட்டங்கள் எடுத்து 200 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, தொடரில் 2=0 என்று முன்னிலை வகிக்கிறது. நேற்று நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வின் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் (படம்) 92 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இன்னும் எட்டு ஓட்டங்கள் எடுத்தால் அவர் சதம் தொடுவார். இங்கிலாந்து அனைத்து விக்கெட்டு களையும் இழந்து 403 ஓட்டங்கள் எடுத்தது.

ஃபாண்டி அகமதுக்கு பயிற்றுவிப்பாளர் பொறுப்பு

அடுத்த ஆண்டு ஆசிய விளை யாட்டிலும் 2019ஆம் ஆண்டில் நடைபெறும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும் களமிறங்கும் சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் புதிய பயிற்றுவிப்பாளராக முன்னாள் நட்சத்திர வீரர் ஃபாண்டி அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய பயிற்றுவிப் பாளரான ரிச்சர்ட் டார்டியின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது. அவரது ஒப்பந்தம் முடிவதற்குள் அவர் பயிற்றுவிப்பாளர் பொறுப் பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். தேசிய இளையர் குழுக்களின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான டார்டியுடன் சேர்ந்து இரண்டு பயிற்றுவிப்பாளர்களும் மூத்த அதிகாரி ஒருவரும் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தைவிட்டு வெளியேறுகின்றனர்.

தொடர்ந்து 15 ஆட்டங்களில் சிட்டி வெற்றி

லண்டன்: மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. நேற்று அதிகாலை நடைபெற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் சுவான்சி யுடன் அது மோதியது. இதில் 4=0 எனும் கோ-ல் கணக்கில் சிட்டி அபார வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கியதிலிருந்து சிட்டி தாக்குதலில் ஈடுபட்டது. ஆதிக்கம் செலுத்திய சிட்டிக்குப் பதிலடி கொடுக்க முடியாமல் சுவான்சி திணறியது. ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் டேவிட் சில்வா கோல் போட்டு சிட்டியை முன்னிலைக்குக் கொண்டு சென்றார். சிட்டிக்காக தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் அவர் கோல் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அணியைத் தூக்கி நிறுத்திய மலான்=பேர்ஸ்டோ

பெர்த்: ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3வது போட்டியில் டேவிட் மலான்=ஜானி பேர்ஸ்டோ ஆகியோரது பொறுப்பான ஆட்டத் தால் இங்கிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரு ஆட்டங்களில் வென்று 2=0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், நேற்று 3வது ஆட்டம் தொடங்கியது. ஆஸ்தி ரேலிய அணியில் ஹேண்ட்ஸ்கோம் பிற்குப் பதிலாக மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இங்கிலாந்து அணி பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்தது.

ஹடர்ஸ்ஃபீல்ட் குழுவை வென்றபோதும் செல்சிக்கு வாய்ப்பு குறைவுதான்

படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: கடந்த வார இறுதியில் நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் ஹேம் குழு விடம் தோற்றதால் பெரும் விமர் சனங்களைச் சந்தித்த செல்சி காற்பந்துக் குழு, நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் ஹடர்ஸ்ஃபீல்ட் குழுவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மீண்டெழுந்தது. இருந்தாலும் நடப்பு வெற்றி யாளரான செல்சி குழு இம்முறையும் பட்டியலில் முதலிடம் பிடித்து பட்டத்தைத் தக்கவைத்துக்கொள் வது என்பது இமாலய காரியம் என்கிறார் அதன் நிர்வாகி அன்டோனியோ கோன்டே.

ரோகித் பேரெழுச்சி; 3வது இரட்டை சதம்

ரோகித்

மொகாலி: விராத் கோஹ்லி ஓய்வில் செல்ல, தற்காலிகமாக தலைமைப் பொறுப்பேற்ற ரோகித் சர்மாவின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி முதல் வெற்றியைப் பெறும் தறுவாயில் இருந்தது. இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1=0 என்ற கணக்கில் இழந்தது. இருந்தாலும் மனந்தளராத அவ்வணி அடுத்து இடம்பெற்று வரும் ஒருநாள் போட்டித் தொடரை அபார வெற்றி யுடன் தொடங்கியது.

அதிக சிக்சர்: கெய்ல் புதிய சாதனை

கெய்ல்

டாக்கா: டி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆக அதிகமாக 18 சிக்சர் அடித்து புதிய சாதனை படைத்தார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக் காரர் கிறிஸ் கெய்ல் (படம்). பங்ளாதேஷ் பிரிமியர் லீக்கின் இறுதிப் போட்டி யில் ரங்பூர் ரைடர்ஸ் அணி யும் டாக்கா டைனமைட்ஸ் அணியும் நேற்று முன்தினம் மோதின. முதலில் பந்தடித்த ரங்பூர் அணியின் தொடக்க ஆட்டக் காரரான ஜான்சன் சார்ல்ஸ் மூன்று ஓட்டங்களில் ஆட்டமிழந் தார். ஆயினும் அடுத்து ஜோடி சேர்ந்த கெய்லும் மெக்கல்லமும் இணைந்து டாக்கா அணியினரின் பந்துகளை வெளுத்தனர்.

கிண்ணம் வென்றால் €350,000 பரிசு

பெர்லின்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவிருக்கின்றன. இந்நிலையில், நடப்பு வெற்றியாளரான ஜெர்மனி அந்தப் போட்டியில் வென்று கிண்ணத்தைத் தக்கவைத்தால் அவ்வணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் 350,000 யூரோ (S$556,310) ஊக்கத்தொகை வழங்கப்ப்டும் என்று அந்நாட்டுக் காற்பந்துச் சங்கம் அறிவித்துள்ளது. பிரேசிலில் 2014ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் வென்று நான்காம் முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது ஜெர்மனி. அப்போது அவ்வணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் 300,000 யூரோ ஊக்கத்தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நட்சத்திர ஜோடியின் திருமண வரவேற்பு டெல்லி, மும்பையில்

விராத் கோஹ்லி - அனுஷ்கா சர்மா இணை. படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராத் கோஹ்லி, இந்தி திரையுலக நட்சத்திரம் அனுஷ்கா சர்மாவின் திருமணம் இத்தாலியில் நடந்தேறியது. இவர்களது திருமண வரவேற்பு விழா வரும் 21, 26 ஆகிய தேதி களில் டெல்லியிலும் மும்பையிலும் நடைபெறவுள்ளது. தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றின் படப்பிடிப்பில் முதல் முறையாக சந்தித்த இவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். முதலில் மறைமுகமாக இருந்த இந்தக் காதல் பின்னர் வெளிப்படையாக இருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இவர்களது திரு மணம் பற்றி அவ்வப்போது வதந்தி பரவிக் கொண்டிருந்தது.

Pages