You are here

விளையாட்டு

சொந்த மண்ணில் பயர்ன் தோல்வி

மியூனிக்: காற்பந்து வீரர் ரொனால் டோவின் கோல் இல்லாமல் பயர்ன் மியூனிக் குழுவை வீழ்த்தியது ரியால் மட்ரிட். நேற்று அதிகாலை மியூனிக்கின் சொந்த அரங்கில் நடந்த சாம்பி யன்ஸ் லீக் அரையிறுதியின் முதல் சுற்றில் ஒரு கோல் முன்னிலையில் ரியால் மட்ரிட் வெற்றி பெற்றது. மூன்றாவது முறையாக இக் கிண்ணத்தை வெல்லத் துடிக்கும் ரியால் மட்ரிட், நேற்று தற்காப்பில் சற்று தடுமாறியது.

கோஹ்லி, டிராவிட், மந்தனா பெயர்கள் விருதுக்கு பரிந்துரை

புதுடெல்லி: இந்திய அரசின் விளையாட்டுத் துறை விருது களுக்கு கிரிக்கெட் வீரர்கள் கோஹ்லி, டிராவிட், தவான், வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அர்ஜுனா விருதுக்காக இந் திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ‌ஷிகர் தவானும் பெண்கள் அணியைச் சேர்ந்த ஸ்மிரிதி மந்தனா ஆகியோரின் பெயர்களும் டென்னிஸ் வீரர்களான ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி ஆகி யோரின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

இங்கிலாந்துக்கு பின்னடைவு

லண்டன்: லிவர்பூல் காற்பந்துக் குழுவின் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஆக்ஸ்லேட் சேம்பர்லேன் உலகக் கிண்ணப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். நேற்று முன்தினம் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரோமா குழுவிற்கு எதிராக சேம்பர்லேன் விளையாடி னார். அப்போது ரோமா வீரர் அலெக் சாண்டர் கோலராவிற்கு கடும் சவால் கொடுக்கும் வகையில் அவர் விளையாடினார். இந்நிலையில் ஆட்டத்தின் 18வது நிமிடமே மூட்டு தசைநார் வலி காரணமாக ஆட்டத்தை° விட்டு சேம்பர்லேன் வெளியேறி னார்.

தடுமாறிய சென்னை; காப்பாற்றிய டோனி

பெங்களூரு: பெங்களூரு கிரிக் கெட் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டோனி, அம்பதி ராயுடுவின் ஆட்டத்தால் சென்னை அணி இமாலய இலக்கை எட்டிப் பிடித்தது. பெங்களூரு அணி நிர்ண யித்த 205 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்திய சென்னை அணிக்கு அம்பதி ராயுடு நல்ல அடித்தளம் அமைத் தார். இருந்தாலும் மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழக்க அவ்வணி தடுமாறியது.

டெல்லி அணியின் புதிய தலைவரானார் ஷ்ரேயாஸ் ஐயர்

புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணித் தலைவர் கௌதம் காம் பீர் பதவி விலகுவதாக அறிவித்து உள்ளார். கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இத்தொடரில் எட்டு அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில், டெல்லி மற்றும் மும்பை அணிகள் இதுவரை விளையாடி உள்ள ஆறு போட்டி களில் ஐந்து போட்டிகளில் தோல் வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன. இதையடுத்து தொடர் தோல்வி களுக்குப் பொறுப்பேற்று டெல்லி டேர்டெவில்ஸ் அணித் தலைவர் கௌதம் காம்பீர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

சாலாவின் அபார கோல்கள்; லிவர்பூலிடம் பணிந்தது ரோமா

லிவர்பூல்: சாம்பியன்ஸ் லீக் அரை யிறுதிப் போட்டியின் முதல் சுற்றில் தன்னுடைய அபார கோல்களால் லிவர்பூலின் சாலா ரோமாவைப் பணிய வைத்தார். தன்னுடைய முந்திய குழுவிற்கு எதிராக நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தின் முதல் 45 நிமிடங் களுக்குள் இரட்டை கோல் போட் டார் சாலா. இது தவிர மூன்றாவது கோல் போடுவதற்கு சடியோ மனேவிற்கு உதவியாகவும் இருந்தார் சாலா. இப்பருவத்தின் தொடக்கத்தில் 34 மில்லியன் பவுண்டுக்கு ரோமா குழுவில் இருந்து லிவர்பூலுக்குச் சென்றார் சாலா. மனேவைத் தொடர்ந்து, ஃபெர் மினோ 7 நிமிட இடைவெளியில் இரண்டு கோல்களைப் போட லிவர்பூலின் கோல் எண்ணிக்கை ஐந்தானது.

தொடர் தோல்வியால் தடுமாறும் மும்பை அணி

படம்: ஏஎஃப்பி

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட் டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 118 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கைக்கூட எட்ட முடியாமல் 18.5 ஓவரிலேயே 87 ஓட்டங்க ளுக்கு ஆட்டமிழந்தது அந்த அணியின் தலைமைப் பயிற்றுவிப் பாளர் ஜெயவர்தனேவுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தோல்வி பற்றி பேசிய அவர், “ஒவ்வோர் ஆண்டும் ஒரேமாதிரி ஆட முடியாது. வீரர்கள் வளர்ச்சி யடைய வேண்டும். “கடின உழைப்புத் தேவைப்படு கிறது. வெறும் திறமை மட்டும் நம்மைக் கொண்டு சேர்க்காது,” என்றார்.

காற்பந்து: தொலைக்காட்சி சந்தா கட்டணம் உயரவில்லை

சிங்கப்பூர்: இவ்வாண்டு சிங்கப்பூ ரில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்கான தொலைக் காட்சித் தொகுப்புக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதற்காக ஒளிபரப்புச் சேவை வழங்கும் சிங்டெல், ஸ்டார்ஹப், மீடியாகார்ப் ஆகிய மூன்றும் முதன்முறையாக பங்காளித்துவம் மேற்கொண்டுள்ளன. வரும் ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை உலகக் கிண்ணக் காற் பந்துப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான உள்ளூர் தொலைக்காட்சி சந்தா கட்டணம் கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்ததைப் போலவேதான் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இத்தொகுப்பிற்கான சந்தா கட்டணம் $112.35 ஆகும்.

யூரோப்பா லீக்; கிண்ணம் வெல்ல வெங்கருக்கான ஒரே வாய்ப்பு

லண்டன்: ஸ்பானிய காற்பந்துக் குழுவான அட்லெட்டிகோ மட்ரிட் டும் இங்கிலிஷ் காற்பந்துக் குழுவான ஆர்சனலும் யூரோப்பா லீக் தொடரின் அரையிறுதிப் போட்டியில் மோதுகின்றன. ஆர்சனலின் சொந்த மண்ணில் சிங்கப்பூர் நேரப்படி நாளை அதி காலை 3.05 மணிக்கு நடைபெற உள்ளது. ஸ்பானிய லா லீகாவின் முன் னணிக் குழுக்களான பார்சிலோனா, ரியால் மட்ரிட் ஆகியவற்றோடு போட்டி போடும் அளவிற்கு முன் னேற்றம் கண்டுள்ளது அட்லெட் டிகோ மட்ரிட் குழு. குறிப்பாக, அட்லெட்டிகோவின் நிர்வாகியாக கடந்த 2011ஆம் ஆண்டு டியேகோ சிமியோன் பொறுப்பேற்றது முதல் அக்குழு வின் தற்காப்பு ஆட்டம் மெருகேறி வருகிறது.

இபிஎல்: நியூகாசலை நசுக்கிய எவர்ட்டன்

படம்: ராய்ட்டர்ஸ்

எவர்ட்டன்: எவர்ட்டன் காற்பந்து வீரர் வால்கோட் போட்ட ஒரே கோலால் இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் எட்டாம் இடத்திற்கு முன்னேறியது எவர்ட்டன். ஆட்ட நேரம் முழுவதற்கும் விழுந்த அந்த ஒரே கோலால் நியூகாசலை நசுக்கியது எவர்ட்டன். கடந்த மூன்று மாதங்களில் வால் கோட் போட்ட முதல் கோலாகும் இது.

Pages