எஸ்பிஎச் மீடியா

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமிப் பரவலைக் கையாண்ட, அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு சிறப்பாகச் செயல்பட்டதற்கு சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளர் சான் யெங் கிட்டின் திறன்வாய்ந்த தலைமைத்துவம் முக்கியக் காரணம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.
எஸ்பிஎச் மீடியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஜூலை 15ஆம் தேதியிலிருந்து தற்போது சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளராகப் பதவி வகிக்கும் திரு சான் யெங் கிட் செயல்படுவார். இவர் தகவல்தொடர்பு மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் தலைவர்.
இளநிலைப் பட்டதாரிகளுக்கான லிம் கிம் சான் நினைவு உபகாரச் சம்பளத்துக்கு ஆர்வமுள்ளோர், ஏப்ரல் 30ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.
தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ‘இமர்ஜிங் டெக்னாலஜிஸ்’ பிரிவின் ரஸ்ஸல் தாம் தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் புதிய தலைவராக வெள்ளிக்கிழமை (மார்ச் 15ஆம் தேதி) அன்று பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்டிற்கு (எஸ்எம்டி) 2022, 2023ஆம் நிதியாண்டுகளில் ஏறக்குறைய $320 மில்லியன் நிதி வழங்கப்பட்டதாக தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியுள்ளார்.