சதுரங்கம்

சென்னை: கேண்டிடேட்ஸ் தொடரில் சாதனை படைத்துள்ள சதுரங்க விளையாட்டு வீரர் டி.குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
டொரோண்டோ: பிடே கேண்டிடேட்ஸ் சதுரங்க தொடர் கனடாவில் உள்ள டொரோண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 6வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, அஜர்பைஜான் கிராண்ட் மாஸ்டரான நிஜாத் அபாசோவுடன் மோதினார். இதில் பிரக்ஞானந்தா 45வது காய் நகர்த்தலின்போது வெற்றி பெற்றார். மற்றோர் இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி 40வது காய் நகர்த்தலின்போது பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரான அலிரேசா ஃபிரோஸ்ஜாவைத் தோற்கடித்தார்.
பிராக்: செக் குடியரசின் பிராக் நகரில் பிராக் மாஸ்டர்ஸ் சதுரங்க தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 7வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான ஆர்.பிரக்ஞானந்தா - டி.குகேஷ் ஆகியோர் நேருக்கு நேர் மோதினார்கள்.
சிங்கப்பூரைச் சேர்ந்த எட்டு வயது மாணவர் அஷ்வத் கௌசிக், ‘கிளாசிக்கல்’ சதுரங்க விளையாட்டில் கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய ஆக இளைய சதுரங்க வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
கிராண்ட்மாஸ்டர் என்பது சதுரங்க ஆட்ட வீரர் அடையக்கூடிய மிக உயர்ந்த பட்டமாகும்.