கலைக்கூடம்

சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடம், சிங்கப்பூர் கலை அரும்பொருளகம் ஆகியவற்றின் தலைமை நிர்வாகியாக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் டாக்டர் யூஜின் டான் பொறுப்பேற்கவுள்ளார். அந்தப் பதவிகளை வகிக்கும் திருவாட்டி சோங் சியாக் சிங் அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
தேசியக் கலை மன்றம், சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் ஆதரவுடன் நடத்தும் இவ்வாண்டின் சிங்கப்பூர் கலை வாரம் ஜனவரி 19 முதல் ஜனவரி 28 வரை நடைபெற உள்ளது.
நாட்டியத்தின் மீதுள்ள நாட்டத்தினால் பல ஆயிரம் வெள்ளி ஊதியம் பெறும் வங்கி வேலையை விடுத்து முழுநேர நாட்டிய பயிற்றுவிப்பாளரானார் ஷைலு வின்ஸ்டன். தற்போது 36 வயதாகும் இவர் வர்த்தக நிர்வாகத் துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர்.
நாட்டு மக்களின் பரிதாப நிலையை அறியாத ஒரு மன்னனுக்கு சிறு வயதிலேயே இறக்கும் விதி. மரணத்திற்குப் பிறகு தன்னுடன் சேர்ந்து சொர்க்கத்திற்கு செல்வதற்குத் துணை தேவை என்ற காரணத்தினால் மாறுவேடத்தில் தனது ஊருக்குச் சென்று மக்களின் ஏழ்மை நிலையைக் கண்டறியும் மன்னரின் கதை தான் இவ்வாண்டின் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ் பேரவை நடத்திய ‘சங்கே முழங்கு’ மேடை நாடகம். 
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவை வழக்கமாக ஈராண்டுகளுக்கு ஒருமுறை படைக்கும் ‘சங்கே முழங்கு’ என்ற மேடை நாடகம், 2019ற்கு பிறகு மீண்டும் இவ்வாண்டு மேடையேறவிருக்கிறது.