வரி

வாஷிங்டன்: மின்வாகனங்கள், கணினிச் சில்லுகள், மருத்துவ தயாரிப்புகள் உட்பட சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கான வரியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளார்.
சுங்கை காடுட் வட்டாரத்தில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் அடங்கிய 2,952 பெட்டிகளை சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் ஏப்ரல் 23ஆம் தேதியன்று பறிமுதல் செய்தனர்.
புதுடெல்லி: மத்திய அரசின் நிகர வரி வருவாய் எதிர்பார்ப்புகளை தாண்டி உயர்ந்து இருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.19.58 கோடி நேரடி வரி வருவாய் வசூல் இருந்ததாகவும் இது முந்தைய ஆண்டை விட 17.7% அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இடைக்கால வரவு செலவு கணக்கில் நேரடி வரி வசூல் ரூ.19.45 லட்சம் கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
44 குடியிருப்புத் திட்டங்களுக்கு ‘ஏபிஎஸ்டி’ எனும் கூடுதல் முத்திரை வரிக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
பெட்டாலிங் ஜெயா: உயர் விலை மதிப்புள்ள பொருள்களுக்கான வரி (சொகுசு வரி) நடைமுறைப்படுத்தப்படுவதை மலேசியா ஒத்திவைத்துள்ளது.