புட்டின்

இருபது ஆண்டுகளில் ரஷ்யாவில் நடந்த மிகக் கொடூரமான தாக்குதலில் ஏராளமானவர்கள் தானியங்கி ஆயுதங்களால் சுடப்பட்டதையடுத்து, ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 24) அந்நாடு துக்கம் காத்தது. தேசியக் கொடிகள் அரை கம்பத்துக்கு இறக்கப்பட்டன.

தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 133 பேர் கொல்லப்பட்டனர். 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைவரையும் கண்டுபிடித்து தண்டிப்பதாக சூளுரைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தேசிய துக்க தினத்தை அறிவித்தார்.

“தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று மார்ச் 23ஆம் தேதி, மக்களுக்கு ஆற்றிய உரையில் திரு புட்டின் வருத்தம் தெரிவித்தார்.
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய அதிபர் விளாடிமிர் புட்டின் அபார வெற்றிபெற்றுள்ளார்.
மாஸ்கோ: ர‌ஷ்யா எந்த நாட்டு தேர்தலிலும் தலையிடாது என்று அந்நாட்டு அதிபர் விலாடிமிர் புட்டின் மார்ச் 13ஆம் தேதி தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ: ரஷ்யாவில் அடுத்த மாதம் (மார்ச் 2024) நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் பதிவு நிறைவுபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ: ர‌ஷ்யா தனது அக்கறைகளைக் கருத்தில்கொண்டு செயல்படும் என்றும் உக்ரேன் போரை மற்ற நாடுகளுக்குப் பரவ விடுவதில் அதற்கு எண்ணம் இல்லை என்றும் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார்.