கரியமிலவாயு

பெர்லின்: உலகெங்கும் 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளியான கரியமில வாயுவின் பெரும்பகுதிக்கு படிம எரிபொருள், சிமெண்ட் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 57 நிறுவனங்களே பொறுப்பு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
லண்டன்: கடந்த 2023ஆம் ஆண்டு உலகளவில் எரிசக்தி சார்ந்த நடவடிக்கைகளால் கரியமிலவாயு வெளியேற்றம் இதுவரை இல்லாத அளவு உயர்ந்ததாக அனைத்துலக எரிசக்தி ஆணையம் (ஐஇஏ) தெரிவித்துள்ளது.
லண்டன்: நாடுகள் மின்சார வாகனங்களுக்கு மிகவும் தாமதமாக மாறினால், எரிவாயு பயன்படுத்தும் வாகனங்கள் அங்கு குவிந்துபோவதற்கு சாத்தியங்கள் உள்ளன என்று கார்பன் டிராக்கர் என்ற கரியமிலவாயு கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாரிஸ்: கரியமிலவாயு வெளியேற்றம் இவ்வாண்டு சுமார் 1% அதிகரித்து என்றும் இல்லாத புதிய உச்சத்தை அடையும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தோக்கியோ: ஜப்பானில் சவப்பெட்டிகளில் உடல்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் காய்ந்த பனிக்கட்டியிலிருந்து (டிரை ஐஸ்) வெளியான கரியமில வாயுவை நுகர்ந்து குறைந்தது நால்வர் மரணமடைந்தனர்.