திரைப்படத்துறை

மும்பை: பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நீண்டநாள்களாக கனடா குடியுரிமை வைத்திருந்தார். கடந்த ஆண்டு அவர் தமது கனடா குடியுரிமையைத் துறந்துவிட்டு இந்தியக் குடியுரிமை கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
உள்ளூர் இலக்கியம், மெய்ம்மை ஆகியவற்றை ஒட்டித் தயாரிக்கப்பட்ட ஐந்து உள்ளூர் குறும்படங்களைக் காட்சிப்படுத்தி, அதில் ஈடுபட்ட இளையர்களின் அனுபவங்களை எடுத்துரைக்கும் நிகழ்ச்சிக்கு கடந்த மாதம் 27ஆம் தேதி தேசிய நூலகக் கட்டடத்தில் சிங்கப்பூர் இந்திய நாடக, திரைப்பட ஆர்வலர்கள் மேடைக்கலை (சிட்ஃபி) எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
பழக்கமில்லாத ஊர், மாறுபட்ட மக்கள், எதிர்பாராத சவால்கள் எனப் பல தடைகள் இருந்தும் கனவு ஒன்றே குறிக்கோளாகப் பயணம் செய்து ‘ஹே அர்ஜுன்’ எனும் காதல்-கற்பனை பாணியில் படத்தை எடுத்துள்ளனர் உள்ளுர்க் கலைஞர்கள்.
இளவயதிலிருந்தே திரைப்படங்கள்மீது நாட்டம் கொண்டுள்ளவர் 28 வயதான கெவின் வில்லியம். அந்த வேட்கை 11 ஆண்டுகால உழைப்பின் பிறகு இன்று வேரூன்றி நிற்க, தனது தொடக்கப் பாதையை தமிழ் முரசு நாளிதழிடம் நினைவுகூர்ந்தார் கெவின்.
குறைந்த செலவில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு நுழைவுச்சீட்டு விலையைக் குறைக்க திரையரங்க உரிமையாளர் சங்கத்திற்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.