You are here

வாழ்வும் வளமும்

மலபார் நகைக்கடையின் ‘எம்ஜிடி-லைஃப்ஸ்டைல் ஜுவல்லரி’

படம்: மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்

மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனம் ‘எம்ஜிடி= லைஃப்ஸ்டைல் ஜுவல்லரி’ எனும் புதிய சில்லறை விற்பனை நகைக் கடையை ஐந்து நாடுகளில் திறந் துள்ளது. சிங்கப்பூரில் அதன் கிளை ஜூரோங் பாய்ண்ட் கடைத் தொகுதியில் அமைந்துள்ளது. புதுப் புது வடிவமைப்புகளில், அன்றாடம் பயன்படுத்தக்கூடிய விதத்தில், கட்டுப்படியான விலை யில் தங்க, வைர நகைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிப் பதே ‘எம்ஜிடி=லைஃப்ஸ்டைல் ஜுவல்லரி’யின் இலக்கு. ஐரோப்பா, தூரக் கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து பல்வேறு வடிவமைப்புகளுடன் கூடிய நகைகள் இங்கு காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

கண்ணதாசன் விழா: நாள் முழுவதும் நடந்தேறியது

படம்: நாதன் ஸ்டூடியோஸ்

பல்லாயிரக்கணக்கான கவிதை கள், திரைப்படப் பாடல்களை எழுதி, தமிழ் மக்களின் நெஞ் சத்தில் நீங்கா இடம்பிடித்த கவியரசர் கண்ணதாசனின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. பிரபல எழுத்தாளருமான கண்ணதாசனின் மாபெரும் படைப்புகளை நினைவுகூர்ந்து அவற்றைப் போற்றும் விதமாக அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் மண்டபத்தில் நாள் முழுதும் பல சுவாரஸ்ய நிகழ்ச்சி கள் இடம்பெற்றன.

தாளவாத்தியங்களில் கலக்கும் கலைஞர்

வில்சன் சைலஸ்

பட்டக்கல்வி பயிலவில்லை. சான்றிதழ்களும் கிடையாது. ஐந்து வயதில் தொடங்கிய இவரது கலை ஆர்வம், அனைத் துலக தாளவாத்தியக் கருவிகள் சிங்கப்பூரிலும் அறிமுகமாவதற் கான காரணங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. உள்ளூர், வெளியூர் மேடை களில் தமது கலைத் திறனை அசாத்தியமாக வெளிப்படுத்தி யுள்ள 50 வயது திரு முகம்மது நூர், எஸ்பிளனேட் கலை அரங் கைத் தமது தாளவாத்திய இசை யால் இன்று மாலை அதிர வைக்க விருக்கிறார்.

மேளதாளம், குதிரை சவாரியுடன் ‘ஐபோன் 10’ வாங்கிய இளைஞர்

மேளதாளம், குதிரை சவாரியுடன் ‘ஐபோன் 10’ வாங்கிய இளைஞர்

மும்பையைச் சேர்ந்த ஆப்பிள் கைபேசி பிரியர் ஒருவர் தான் விரும்பும் ‘ஐபோன் 10’ வாங்க குதிரை மீது சவாரி செய்து, மேள தாளத்துடன் ஆரவாரமாய் கடைக் குச் சென்று வாங்கினார். குதிரை மீது அமர்ந்து, கையில் ‘ஐ லவ் ஐபோன் 10’ என்ற பதா கையைப் பிடித்தபடி, இசைக்குழு வினர் அதிரும் மேளதாள ஒலியுடன் தன்னைக் கடை வரை பின் தொடர்ந்துவர முன்னதாகவே ‘ஆர்டர்’ செய்து வைத்திருந்த ‘ஐபோன் 10’ஐ வாங்கிச் சென் றுள்ளார் இளைஞர் ஒருவர். ‘ஐபோன் 10’ வாங்க மேள தாளத்துடன் குதிரை மீது இளை ஞர் சவாரி சென்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வேக மாகப் பரவி வருகிறது.

தமிழ் முரசு கவிஞர்களின் கவிதை வாசிப்பு

ஞாயிறுதோறும் தமிழ் முரசு நாளிதழில் கவிதை எழுதி வரும் கவிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு அங்கம். வளர்ந்துவரும் கவிஞர்களும் சொல் வித்தகர்களும் ‘அறம்’ எனும் கருப்பொருளில் கவிதை வாசிக்கிறார்கள். 20க்கும் மேற்பட்ட கவிஞர்களின் மாறுபட்ட கவிதைகளைக் கேட்டு ரசிக்கலாம். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். நவம்பர் 5, ஞாயிறு மாலை 5.30 மணிக்கு விக்டோரியா அரங்கத்திற்கு முன்பு இருக்கும் ‘டென்ட்@எம்பிரஸ்’ கூடாரத்தில் நடைபெறும்.

தெருக்கூத்து வடிவில் ‘சிலம்புச் செல்வி’

சிலப்பதிகார கண்ணகி யின் கதையைத் தெருக்கூத்து வடிவில் முன்வைக்கிறது பாஸ்கர் கலைப் பள்ளி. நடனமாகவும் நாடகமாகவும் மேடையேறியுள்ள இந்தக் காப்பியம், தெருகூத்து வடிவில் சிங்கப்பூரில் படைக்கப்படுவது இதுவே முதன்முறை. சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘நாட்டுப்புற கலை வளர்க்கும் கதை மரபு’ அங்கத்தில் பாஸ்கர் கலைப் பள்ளியின் ‘சிலம்புச் செல்வி’ தெருக்கூத்தும் இடம்பெறுகிறது. பாண்டிய மன்னனுக்கும் கண்ணகிக்கும் இடையே நடைபெறும் உச்சக்கட்ட விவாதக் காட்சி 30 நிமிடத் தெருக்கூத்தாக உருவாக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்காக பாலர்கள் உருவாக்கிய சிறப்பு லெகோ ரங்கோலி

தீபாவளிக்காக துணி, வடிவத் துண்டுகள், வண்ணக் குச்சிகள் போன்ற பல பொருட்களை பயன்படுத்தி பிரம்மாண்ட ரங்கோலியை தங்கள் ஆசிரியர் உதவியுடன் உருவாக்கி உள்ளனர் ஸ்டாம்ஃபர்ட் அமெரிக்கன் அனைத்துலகப் பள்ளியின் பாலர் பள்ளி மாணவர்கள். படம்: ஸ்டாம்ஃபர்ட் அமெரிக்கன் அனைத்துலகப் பள்ளி

Pages