You are here

வாழ்வும் வளமும்

உடற்பயிற்சி இல்லையேல் மூளை சுருங்கி விடும்

படம்: தகவல் சாதனம்

எந்த உடற்பயிற்சியும் இல்லாமல் எதையேனும் வாயில் போட்டுக் கொண்டு தொலைக்காட்சியே கதியென இருந்தால் மூளை நாளடைவில் சுருங்கி விடும் அபாயமுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மோசமான உடற்தகுதிக்கும் மூளையின் அளவுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதை அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக, சராசரியாக 40 வயதை எட்டிய, இதய நோய் ஏதும் இல்லாத சுமார் 1,600 பேரிடம் ‘டிரெட்மில்’ ஓட்டச் சோதனையை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.

பிரதமரின் அன்பர் தின வாழ்த்துகள்

அமெரிக்காவுக்குச் சென்றிருக்கும் பிரதமர் லீ சியன் லூங்கும் அவரது துணைவியார் ஹோ சிங்கும் சிங்கப்பூர் மக்களுக்கு தங்களுடைய அன்பர் தின வாழ்த்துகளைத் தெரிவித்தனர். சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள ‘ஃபார்மர்ஸ் மார்க்கெட்’ பேரங்காடிக்கு அருகே எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்துடன் வாழ்த்துகளையும் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரதமர் லீ பதிவேற்றியுள்ளார். இன்று கலிஃபோர்னியாவில் உள்ள சன்னிலாண்ட்சில் நடைபெறும் ஆசியான், அமெரிக்க உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லீ பங்கேற்கிறார். படம்: பிரதமரின் ஃபேஸ்புக் பக்கம்

லிட்டில் இந்தியாவுக்குப் பொலிவூட்டும் சுவர்ச் சித்திரங்கள்

லிட்டில் இந்தியாவுக்குப் பொலிவூட்டும் சுவர்ச் சித்திரங்கள்

லாசால் கலைக் கல்லூரியின் ஹானர்ஸ் கலை நிர்வாக மாணவர் களுடன் இணைந்த உள்ளூர் ஓவியர்களின் கைவண்ணத்தில் லிட்டில் இந்தியாவின் பெலிலி யோஸ் சாலையின் கடைச் சுவர் கள் தற்போது புதுப் பொலிவுடன் மிளிர்கின்றன. லிட்டில் இந்தியாவிற்கு வண்ணம் சேர்த்துள்ள பாரம்பரிய வேலைகளை அங்குள்ள சுவர் களில் ஓவியங்களாகத் தீட்டி யிருப்பதன் மூலம் ‘ஆர்ட் வீக் லிட்டில் இந்தியா’ எனும் கலை விழா நிகழ்வு அங்கு வருபவர் களின் கண் முன் பழைய நினைவு களை நிழலாடவைக்கும். கிளி ஜோசியர், பால் விற்கும் வங்காள வியாபாரி, ‘ஐஸ்’ பந்து கடைக்காரர்கள், மலர்வளையம் விற்பவர், சலவைத் தொழிலாளி ஆகிய தொழில்கள் சுவரோவியங் களாக வலம் வருகின்றன.

திருமணமான பின்பும் கடுகளவும் காதல் குன்றாத பிரபல ஜோடிகள்

கடுகளவும் காதல் குன்றாத பிரபல தம்பதியர்

மதம், இனம், மொழி இவற்றைக் கடந்து வரும் காற்றைப் போல காதலையும் சுவாசிப்போம் என்று இன்றைய அன்பர் தினத்தைக் கொண்டாட இவ்வுலகமே காத்துக் கொண்டுள்ளது. அவ்வகையில் இளம் நெஞ்சங்களின் மனதில் காதலை உரம்போட்டு தீவிரமாக வளர்க்க பிரபல நட்சத்திரங்களின் காதல் வாழ்க்கையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

முதியோருக்கும் அன்பர் தின மலர்கள்

செயிண்ட் ஜான்ஸ் முதியோர் இல்லம். - ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்

நாளை அன்பர் தினம். அன்புக்குரியவர்களுக்கு மலர் தந்து அன்பை வெளிப்படுத்தும் தினம். ஆதரவற்ற முதியோருக்கும் அன்பு தேவை என்பதைப் பறைசாற்ற நேற்று செயிண்ட் ஜான்ஸ் முதியோர் இல்லத்திற்கு மலர்களுடன் சென்று அன்பைப் பரிமாறிக் கொண்டனர் தேசிய தொண்டூழிய கொடையாளர் நிலையத்தின் உறுப்பினர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமூகத்தின் ஆதரவை எதிர்நோக்கும் மதுக்கலவை நிபுணர்

திரு யுக்னேஸ். படம்: திமத்தி டேவிட்

சுதாஸகி ராமன்

மதுக்கூடத்தில் முழுநேரமாகப் பணிபுரிவதாகத் தம் தாயாரிடம் கூறியபோது அதை அவரால் துளியும் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. மதுக்கூடத் துறையில் பணி புரிவோரைப் பார்த்து முகம் சுளிக்கும் பலரின் மனநிலையே அப்போது அவருக்கும் இருந்தது. இந்நிலையில், சமுதாய வரம்பு களைத் தாண்டி வெளிநாடுகளில் தமது மதுக்கலவைத் திறன்களை வெளிப்படுத்தும் அளவுக்கு அத் துறையில் முன்னேறியுள்ளார் திரு யுக்னேஸ். கடந்த மாத இறுதியில் பெல்ஜி யத்தில் நடைபெற்ற மதுக்கலவைப் படைப்பில் சிங்கப்பூரைப் பிரதி நிதித்து ‘காக்டெய்ல்ஸ்’ எனப்படும் மதுக்கலவையைச் செய்து காட்ட யுக்னேஸுக்கு வாய்ப்பு கிடைத்தது.

கரிகாலன் விருதுத் தேர்வுக்கு நூல்களை அனுப்பலாம்

கோப்புப்படம்

2015ஆம் ஆண்டு முதல் பதிப் பாகப் பதிப்பிக்கப்பட்ட நூல்களுக்கு கரிகாலன் விருது வழக்கம்போல் இவ்வாண்டும் வழங்கப்படும். விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதற்காக 2015ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், நாடகம் உள் ளிட்ட அனைத்துத் துறை நூல் களின் 4 படிகளை வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். குடியுரிமை அல்லது நிரந்தரவாசத் தகுதிபெற்ற படைப்பாளர்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும். நூல்களை டன்லப் ஸ்திரீட்டில் உள்ள திரு. முஸ்தபா அவர்களின் தமிழ்ப் புத்தக நிலையத்தில் ஒப் படைக்கவேண்டும். மேல் விவரங் களுக்கு நா.ஆண்டியப்பன் (97849105), சுப.

Pages