You are here

வாழ்வும் வளமும்

வெளிநாட்டு ஊழியரின் தீபாவளி குதூகலம்

வில்சன் சைலஸ்

குடும்பத்தினரை விட்டு இன்று தீபாவளி கொண்டாடும் வெளி நாட்டு ஊழியர்களைக் கலை நிகழ்ச்சிகளின் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மகிழ்வித்தது வெளிநாட்டு ஊழியர் நிலையம். ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் வெளி நாட்டு ஊழியர்களுக்குப் போதிக்கப்பட்டது. வெளிநாட்டு ஊழியர்களுக் கான ‘ஸ்கெல்’ மனமகிழ் மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஏறக்குறைய 5,000 வெளிநாட்டு ஊழியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

ஐஃபோன் மறைச்சொல் குறித்து கவனம்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன்களுக்கான ios இயக்க மென்பொருள் மிகவும் பாதுகாப்பானது என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதன் இயக்க மென்பொருளைத் தனது முழு கட்டுப்பாட்டில் ஆப்பிள் நிறுவனம் வைத்திருப்பதே இதற்குக் காரணம். ஆனால் இதையும் தாண்டி இணைய ஊடுருவல் காரர்கள் ios இயக்க மென்பொருளை ஊடுருவி முக்கிய தகவல்களைத் திருடும் வழிகளைக் கண்டுபிடிக் கின்றனர். ஐஃபோன் பயன்படுத்தும் ஒருவருக்கு அண்மையில் இத்தகைய பிரச்சினை ஏற்பட்டது. சமையல் செயலி ஒன்றை அவர் பயன்டுத்திக் கொண்டிருந்தபோது அவரது ஆப்பிள் அடையாள மறைச்சொல் கேட்கப்பட்டது. பொதுவாக மென்பொருளை மேம்படுத்த மறைச்சொல் கேட்கப்படு வதுண்டு.

‘கம்பன் காப்பியத்தில் ஆசை அண்ணன் அன்புத் தம்பி’

சிங்கப்பூர் இலக்கிய வட்டத்தின் ஆதரவில், அ.கி. வரதராசன் எழுதியுள்ள ‚‘கம்பன் காப்பியத்தில் ஆசை அண்ணன் அன்புத் தம்பி’ ‚ என்ற நூல் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிடப்படுகிறது. நூலை நாடாளுமன்ற முன் னாள் நியமன உறுப்பினர் திரு இரா. தினகரன் அவர்கள் வெளியிடுகிறார். முதல் படியை சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுக் சங்கத்தின் (சிண்டா) தலைவர் திரு கு.பரதன் பெற்றுக்கொள் வார். நூல் விற்பனைத் தொகை முழுவதும் வெள்ளிக்கு வெள்ளி நூலாசிரியரால் ஈடுகட்டப்பட்டு, சிண்டாவுக்கு நன்கொடையாக வழங்கப்படும். நூல் வெளியீட்டு விழாவின் சிறப்பு அங்கமாக மதுரை பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ.

நீரிழிவு ஆபத்தைக் குறைக்க...

ஒமேகா-3 பாலிஅன்சேச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்த வால்நட், மீன், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றை உட் கொண்டால் ‘டைப்=2’ நீரிழிவால் பாதிக்கப்படும் அபாயத்தைக் குறைக்கலாம் என்று அண்மைய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஒமேகா=3 கொழுப்பு அமிலங் களில் முக்கியமான லினோலியிக் அமிலம் ஒருவரது ரத்தத்தில் அதிகமாக இருந்தால் எதிர்காலத் தில் அவர் ‘டைப்=2’ நீரிழிவால் பாதிக்கப்படும் அபாயம் 35% குறையும் என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

முதல் உடற்பிடிப்பு இயந்திரம் ‘எம்மா’

எண் 1 ராஃபிள்ஸ் பிளேசில் முடியாது. உள்ள நோவாஹெல்த் பாரம்பரிய சீன மருந்தகத்திற்குச் செல்லும் நோயாளிகள் இனி அங்குள்ள ‘எம்மா’ என்ற இயந்திர மனிதனின் உடற்பிடிப்புச் சேவையையும் பெற முடியும். வெள்ளை நிற இயந்திரத்தி லிருந்து விரிவடையும் ‘எம்மா’வின் இரு கரங்கள், முதுகு மற்றும் மூட்டு வலிக்கு இதமாகப் பிடித்து வலி நிவாரணியாகத் திகழ் கின்றன. புதிய எம்மா இயந்திர மனிதனின் சேவை நேற்று அதி காரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

எழுத்தாளர் விழாவில் முத்தமிழ் வில்லுப்பாட்டு

படம்: திருமதி பாரதி திருமகன்

‘தந்தனத்தோம் என்று சொல்லியே’ வில்லினில் பாட சிங்கப்பூர் வருகிறார் பிரபல வில்லுப்பாட்டு கலைஞர் டாக்டர் திருமதி பாரதி திருமகன். கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டின் திருநெல் வேலியில் தோன்றிய இக்கலை, ஆயுத மாகப் பயன்படுத்தப்படும் வில்லை இசைக்கருவியாக மாற்றி, தாள நயத் துடனும் பாடல், வசனம் போன்ற வற்றால் நகைச்சுவையுடனும் கலந்து கவர்ச்சியாகக் கதை சொல்லப் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் முரசின் பிரம்மாண்ட படைப் பாக ‘நாட்டுப்புறக் கலை வளர்க்கும் கதை மரபு’ என்ற நிகழ்ச்சி நவம்பர் 4ஆம் தேதி இரவு 7 மணிக்கு விக் டோரியா அரங்கில் நடைபெற உள்ளது.

8ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை தீமிதித் திருவிழா

சவுத் பிரிட்ஜ் சாலையின் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வருடாந் திர தீமிதித் திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, 8ஆம் தேதி அன்று நடைபெறும். சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயத்தில் மாலை சுமார் 6 மணியளவில் அலங்கரிக் கப்படும் கரகத்துடன் இரவு சுமார் 7 மணிக்கு மாரியம்மன் ஆலயத்தை நோக்கி தலைமைப் பண்டாரம் புறப்படுவார். கிட்டத்தட்ட 4,500 பக்தர்களை வழிநடத்திச் செல் லும் தலைமைப் பண்டாரம் இரவு சுமார் 8 மணிக்கு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தை வந்தடைவார். அதை தொடர்ந்து ஆண் பக்தர்கள் அனைவரும் தீமிதித்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியவுடன் பெண் பக்தர்கள் தீக்குழியைச் சுற்றி வருவர்.

‘வசந்தம் ஸ்டார் 2017’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி

வசந்தம் ஸ்டார் பாட்டுப் போட்டி யின் பிரம்மாண்ட இறுதிச் சுற்று ‘மீடியாகார்ப்’ வளாகத்தில் நடைபெறவுள்ளது. வரும் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த இறுதிச் சுற்றில் சுவாதி=நந்திதா, ‌ஷீதல்= கீர்த்தனா நிஷ்மேன்= ஷோபனா ஆகிய மூன்று ஜோடி கள் ‘வசந்தம் ஸ்டார் 2017’ பட்டத்தை வெல்ல போட்டியிடு வார்கள். 12 வார கடும் சவாலைக் கடந்து இந்த இறுதிச் சுற்றுக்கு இவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இறுதிப் போட்டியில் பட்டம் வெல்லும் ஜோடி 15,000 வெள்ளி ரொக்கப் பரிசையும் பெறுவார்கள். இந்நிகழ்ச்சியில் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள் கிறார்.

Pages