You are here

வாழ்வும் வளமும்

தமிழ்ச் சொல்லை முன்னிறுத்தும் ‘அறம்’ சிங்கப்பூர் எழுத்தாளர் விழா

படம்: டாக்டர் பாரதி திருமகன்

நவீன இசையில் அரங்கேறும் கவி தைகள், பாரம்பரிய முறையில் படைக்கப்படும் கதைகளுடன் மாறுபட்ட படைப்பிலக்கிய அனு பவத்தைத் தரும் இந்த ஆண்டின் சிங்கப்பூர் எழுத்தாளர் விழா. முதல்முறையாக ‘அறம்’ என்ற தமிழ்ச் சொல்லைக் கருப்பொரு ளாகக்கொண்டு ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இந்த ஆண்டு விழாவில் தமிழ் முரசு நாளிதழும் இணைந் துள்ளது. ‘கவிதைகளின் அடிநாதம்: இசையின் தத்துவம்’ என்ற தலைப் பில் ‘ராக்’ (Rock), ‘ஜாஸ்’ (Jazz) போன்ற நவீன மேற்கத்திய இசை யில் மேடையேறவுள்ள தமிழ்க் கவிதை வாசிப்பு தமிழ் முரசு படைக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று.

‘இத்தனை முறைதான் ‘புஷ் அப்’ செய்யவேண்டும் என்ற அவசியமில்லை’

உடற்பயிற்சிகள் பொதுவாக உடல் ஆரோக்கியமாகவும் வாளிப்பாகவும் இருக்க பெரும் பங்கு வகிக்கின்றன. உடற்பயிற்சிகளுள் முக்கிய ஒரு பயிற்சியான ‘புஷ் அப்’ பயிற்சியை ஒருநாளைக்கு இத்தனை முறை தான் செய்யவேண்டும் என்ற அவ சியம் இல்லை. இது ஒருவரின் உடல் வலிமை, சக்தி சார்ந்தது. ஒரு ஆரோக்கியமான 25 வயது ஆண் 39 ‘புஷ் அப்’ வரை செய்யலாம். அதே நபரால் தினசரி இதனைச் செய்யும்போது 54 அல்லது அதற்கும் அதிகமான முறை கூட இந்தப் பயிற்சியை செய்யமுடியும். 50 வயது மதிக்கத் தக்க ஒரு ஆண் 21 ‘புஷ் அப்’ பயிற்சி செய்வது நல்லது. பெண்களும் இந்த ‘புஷ் அப்’ உடற்பயிற்சியை செய்கின்றனர்.

சுத்தமான நெய்யை கண்டுபிடிக்கும் வழிகள்

இன்னும் சில வாரங்களில் தீபாவளித் திருநாள் வரவுள் ளது. தீபாவளி என்றால் வித விதமான பலகாரங்களுக்கு பஞ்சமிருக்காது. இதில் நெய் உருண்டை, நெய் முறுக்கு, நெய் ஊறும் அல்வா என நெய்யில் தயாராகும் பலவித மான பலகாரங்களும் அடங்கும். இந்தப் பலகாரங்களை செய்ய நாம் பயன்படுத்தும் நெய் சுத்தமானது தானா என்பதைக் கண்டுபிடிக்க இரு வழிமுறைகளைப் பின்பற்றலாம். சுத்தமான நெய் என்பது அறை வெப்பநிலையில் உருகும் தன்மை கொண்டது. எனவே, சிறிது நெய்யை எடுத்து உள்ளங்கையில் விட்டு சற்றுநேரம் வரை வைத்திருங் கள். சிறிது நேரத்திலேயே உள்ளங்கையில் வைக்கப்பட்ட நெய் உருகிவிட்டால் அது சுத்தமான நெய்.

களைகட்டும் விற்பனைத் திருவிழா

சுதாஸகி ராமன்

சன்டெக் மாநாட்டு மையத்தில் நடைபெறும் ‘சிங்கப்பூர் அனைத் துலக இந்தியக் கண்காட்சி’க்கு வருவோரை வரவேற்க முன்னணி பாலிவுட் நட்சத்திரமான ஷாருக் கானும் இந்திய கிரிக்கெட் சகாப் தமான சச்சின் டெண்டுல்கரும் காத்திருக்கின்றனர். தொலைவிலிருந்து பார்க்கும் போது இவ்விரு பிரபலங்களை நேரில் காண்பதுபோல் இருந்தா லும் அருகே சென்ற பின்னரே அவர்கள் மெழுகுச்சிலைகளாக நிற்பது தெரியும்.

சன்டெக் சிட்டியில் சிங்கப்பூர் அனைத்துலக இந்திய வர்த்தகக் கண்காட்சி

படம்: டி ஐடியஸ், இந்திய ஏற்றுமதி அமைப்புகள் சம்மேளனம்

சிங்கப்பூரின் ஆகப் பெரிய விற்பனை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்றான சிங்கப்பூர் அனைத்துலக இந்திய வர்த்தகக் கண்காட்சி (SIIEXPO) இம்மாதம் 7ஆம் தேதியிலிருந்து 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவின் வணிகத் துறை அமைச்சு அமைத்த இந்திய ஏற்றுமதி அமைப்புகள் சம்மேளனம், இவ்வாண்டு 80க்கும் மேலான பங்கேற்பாளர்களை அழைத்து வருகிறது. இந்தியாவின் உலகளாவிய ஏற்றுமதியில் ஏறத்தாழ 70 விழுக் காடு பங்களிக்கும் சம்மேளனம், 2012ஆம் ஆண்டு முதல் SIIEXPO வர்த்தகக் கண் காட்சிக்குக் கூட்டாக ஏற்பாடு செய்து பங்கெடுத்து வருகிறது.

பர்வீன் சுல்தானாவுடன் கலந்துரையாடல்

சிங்கப்பூர் வந்துள்ள பேராசிரியை பர்வீன் சுல்தானாவுடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கலந்துரையாடல் இன்று புதன்கிழமை இரவு 7 மணிக்கு சையது ஆல்வி சாலையிலுள்ள ஆனந்த பவன் உணவகத்தின் இரண்டாவது மாடியில் நடைபெறும்.

பழனியில் அரிய கற்சிலைகள்

பழனி: பழனி, புதுஆயக்குடி குமாரநாயக்கன் குளத்தின் தெற்குக் கரை அருகே வயல் வெளியில் சப்த கன்னியர் சிலைகள் சிதைந்த நிலையில் கண்டறியப்பட்டது. சப்த கன்னியர் தொகுப்புச்சிலையில் கடைசி 4 தெய்வங்களான வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ் வரி ஆகியவற்றை ஒரே பலகைக் கல்லில் வடிவமைத்துள்ளனர். சப்த கன்னிமார்களில் முதலில் உள்ள பிரம்மி, மகேஸ்வரி, கவுமாரி போன்ற உருவங்கள் கிடைக்க வில்லை. தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள சிலைகளுக்கு அருகே பாறையில் உளியால் செதுக்கிய சுவடுகள் தென்படுகின்றன.

‘ராஜ’ அம்சங்களுடன் தீபாவளி கொண்டாட்டங்கள்

படம்: திமத்தி டேவிட்

ராஜா, ராணி வேடங்களில் கைபேசி செயலி மூலம் புகைப்படம் எடுத்துகொள் வது போன்ற புதிய அம்சங்களை இந்த ஆண்டின் லிட்டில் இந்தியா தீபாவளி கொண்டாட்டங்களில் எதிர்பார்க்கலாம். அரச மாளிகை, ராஜ யானைகள், நடன உற்சவம் என பழங்கால மன்னர் காலத்தை கருப்பொருளாகக் கொண்டு இருக்கிறது இவ்வாண்டின் லிட்டில் இந்தியா தீபாவளிக் கொண்டாட்டங்கள். அடுத்த மாதம் 2ஆம் தேதி தீபாவளி ஒளியூட்டு நிகழ்ச்சியுடன் லிட்டில் இந்தியாவில் பண்டிகை குதூகலம் களைகட்டவிருக்கிறது. அன்றிரவு ரேஸ் கோர்ஸ் சாலையில் கண்கவர் உற்சவ ஊர்வலம் நடக்கவுள்ளது.

Pages