You are here

வாழ்வும் வளமும்

கர்நாடக சங்கீத கருத்தரங்கு - இசை முத்துக்கள்

வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் தஞ்சாவூர் பாரம்பரிய இசைப் பள்ளியின் நிறுவனர் திருமதி கௌரி கோகுல் அவர்கள் வழங்கும் ‘இசை முத்துக்கள்’ எனும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பாடல்களை இயற்றியவர்களையும் அந்தப் பாடல்களையும் பற்றிய இந்தக் கருத்தரங்கு வரும் செப்டம்பர் மாதம் 2, 3, 9, 10 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. குளோபல் இந்தியன் அனைத்துலகப் பள்ளியில் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கில் கர்நாடக சங்கீதத்தில் அறிமுகம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்துகொள்ள 40 வெள்ளி கட்டணம்.

கல்வித் தரம் உயர்த்தும் உன்னதத் திட்டம்

படம்: திமத்தி டேவிட்

மும்பையிலிருந்து சுதாஸகி ராமன்

கட்டடத்தின் நுழைவாயிலை அடைந்ததும் பிள்ளைகள் எழுப்பிய சத்தம் காதில் விழுந்தது. வகுப்பு அறையை அடைந்தபோது சிறார் கள் அங்குமிங்கும் ஓடியபடி இருந் ததைக் காண முடிந்தது. வேறு சிலர் தங்களுக்குள் விளையாடிக் கொண்டிருந்தனர். பாடத்தில் கவனம் செலுத்தாத அந்த மாண வர்களைப் பொருட்படுத்தாமல் ஆசிரியர்கள் தொடர்ந்து பாடம் நடத்திக்கொண்டிருந்தனர். சிங்கப்பூரின் வீவக நான்கறை வீட்டின் வசிப்பறைதான் அந்த வகுப்பறையின் பரப்பளவு. அதில் மூன்று ஆசிரியர்கள், 45 பாலர் களுக்கு எழுத்துகளுடன் பாடல் களையும் கதைகளையும் கற்றுக் கொடுக்கின்றனர்.

இசைகள் சங்கமிக்கும் சில்வர் ஆர்ட்ஸ் 2017

முஹம்மது ரஃபி. செய்தி, படம்: திமத்தி டேவிட்

மூத்தோரை ஆதரிக்கவும் கலைகள் மூலம் அவர்களின் நலனைப் பேணிக்காக்கவும் இவ் வாண்டு ஆறாவது முறையாக செப்டம்பர் மாதம் முழுதும் நான்கு வார இறுதிகளில் ‘சில்வர் ஆர்ட்ஸ் 2017’ எனும் தலைப்பில் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறது தேசிய கலைகள் மன்றம். இளையரையும் மூத்தோரையும் இணைக்கும் நோக்கத்துடன் தேசிய கலைகள் மன்றம், மூத் தோர் சார்ந்த இசை, கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், குறும் பட வெளியீடு, பயிலரங்குகள் என 38 நிகழ்ச்சிகளை 20 இடங் களில் படைப்பதோடு அவற்றில் சுமார் 70 முதியவர்களையும் ஈடுபடுத்துகிறது.

ஆசிய யோகாசனப் போட்டிகள்

காலாங் சமூக மன்றத்தில் இம்மாதம் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ஏழாவது ஆசிய யோகா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதன் தொடர்பில் அனைத்து வயதினருக்குமான யோகாசனப் போட்டிகள் நடைபெறும். 29ஆம் தேதி ஆசிய யோகா பட்டயக் கல்விக்கான தேர்வுகள் நடைபெறும். போட்டிகளின் இறுதி நாளான 30ஆம் தேதி கருத்தரங்கு, கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியை ஹேவ்லாக் ரோட்டில் இருக்கும் யோகா ஸ்போர்ட்ஸ் சிங்கப்பூர் அமைப்பு நடத்துகிறது. இதுகுறித்த மேல் விவரங்களுக்கு www.yogasports.sg என்ற இணையப் பக்கத்தை நாடலாம்.

மாடித் தோட்டத்திற்கு நல்ல வரவேற்பு

இந்திய வேளாண் தோட்டக் கலை திட்டத்தின் மாடித் தோட்ட திட்டம் தற்போது கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நடப்பாண்டு முதல் கிராம மக்களுக்கும் மானியத்தில் மாடி தோட்ட விதைப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. கத்திரி, மிளகாய், தக்காளி, பாகல், அவரை, முள்ளங்கி, வெண்டை, கொத்தமல்லி, கீரை, கொத்தவரங்காய் உள்ளிட்ட விதைகள் இந்த விதைப் பையில் இருக்கும். படம்: ஊடகம்

ஹலால் சான்றிதழுடன் ‘டிம் சம்’ உணவகம்

‘டிம் சம்’ எனப்படும் பாரம்பரிய சீன உணவு வகைகள் பொதுவாக சீனர்களுக்கு பரிட்சயமானவை என்ற எண்ணத்தை மாற்ற வைத் துள்ளது ‘டிம் சம் பிளேஸ்’ உண வகம். எண் 791 நார்த் பிரிட்ஜ் ரோட்டில் அமைந்துள்ள இந்த உணவகம் இப்போது ‘ஹலால்’ சான்றிதழைப் பெற்றுள்ளது. ‘சிக்கன் சியூ மாய்’, சினை இறால் ‘டம்ப்ளிங்’, முட்டை ‘கஸ்ட்டர்ட் பன்’, சீன பாணியில் பொரிக்கப்பட்ட ‘கோபி மஞ்சூ ரியன்’ உட்பட பலதரப்பட்ட உணவு வகைகள் சிங்கப்பூரர்களுக்கே உரிய பாணியில் இங்கு சமைக் கப்படுகின்றன. சீன அல்லது ஜப்பானிய உண வகம் என்றாலே மீன், இறைச்சி ஆகியவற்றின் வாடை அதிகமாக இருக்கும் என்பதால் இந்தியர்கள் பலர் அங்கே செல்வது குறைவாக இருக்கும்.

1/4 கிலோ தங்கத்தை பரிசாக வென்ற முதல் அதிர்ஷ்டசாலி

படம்: ஜோய்ஆலுக்காஸ்

பிரபல இந்திய நகைக்கடையான ஜோய்ஆலுக்காஸ் நடத்திய அதிர்ஷ்டக் குலுக்கலில் வாடிக் கையாளர் திரு ராஜேஷ் பழனி அண்மையில் வென்றார். கால் கிலோ கிராம் எடையுள்ள தங்கக் கட்டி அவருக்குப் பரிசாகக் கிடைத்தது. இந்த தங்கத்தின் மதிப்பு சுமார் $15,000. இந்தியாவின் மும்பை நகரத் தைச் சேர்ந்த அவர், விடுமுறைக் காக சிங்கப்பூருக்கு வந்திருந்த போது ஜோய்ஆலுக்காஸ் கடை யில் ஆபரணங்களை வாங்கி இந் தப் போட்டியில் கலந்துகொண்டார். குலுக்கலில் வெற்றிபெற்ற தகவல் அறிந்தவுடன் மீண்டும் சிங்கப்பூருக்கு ஜூலை 8ஆம் தேதி வந்து தமது பரிசைப் பெற்றுக்கொண்டார் திரு ராஜேஷ்.

சிங்கப்பூரில் ஆயுர்வேத தகவல் மையம்

படம்: திமத்தி டேவிட்

ஆயுர்வேத மருத்துவத் தகவல்கள், மருந்துகள், குறிப்புகளை ஒரே இடத்தில் தெரிந்துகொள்ள புதிய தகவல் மையம் ஒன்று சிங்கப்பூரில் அறிமுகமாகிறது. இரண்டாவது ஆண்டாக நேற்று நடந்த அனைத் துலக ஆயுர்வேத மாநாட்டில் சிங்கப்பூருக்கான இந்திய தூதர் திரு ஜாவீத் அஷ்ரஃப் இதனை அறிவித்தார். ஆயுர்வேத விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் இந்தியா வின் ‘ஆயுஷ்’ அமைச்சு பல ஆண்டுகளுக்கு முன் தோற்று வித்த ‘ஆயுஷ் செல்’ எனும் ஆயுர் வேத தகவல் மையம், ஐரோப்பா, சுவிட்சர்லாந்து, வெனிசுவேலா, ரஷ்யா, மொரி‌ஷியஸ், சீனா, மலேசியா என மொத்தம் 24 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் இப்போது சிங்கப்பூரும் இணைகிறது.

Pages