மலேசியக் கப்பலை மோதிய சம்பவம்; மீண்டும் நாடுகளுக்கிடையே விரிசல்

கோலாலம்பூர்: சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கிடையே கடற்பகுதி விவகாரத்தில் இருந்து வந்த சர்ச்சையை அடுத்து அதே நீர்ப்பகுதி தொடர்பில் மீண்டும் ஒரு விரிசல் ஏற்பட்டுள்ளது.
'போலாரிஸ்' எனும் மலேசிய அரசாங்கக் கப்பல் மீது 'பிராயஸ்' எனும் கிரேக்கக் கப்பல் மோதிய சம்பவத்தால் இரு நாடுகளுக் கிடையே கடல்துறை தொடர்பில் மறுபடியும் ஓர் இறுக்கநிலை ஏற் பட்டுள்ளது.
மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து மலேசிய அதிகாரிகள் கிரேக்கக் கப்பலைப் கைப்பற்றிய துடன் அதில் இருந்தவர்களைத் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
'பிராயஸ்' கப்பல் எண்ணெய் நிரப்பிவிட்டு புறப்படும் நேரத்தில் நங்கூரமிட்டு நின்றுகொண்டிருந்த 'போலாரிஸ்' மீது மோதியது.
அது மோசமான விபத்தாக இல்லாததால் 'பிராயஸ்' தனது அடுத்த துறைமுகமான ஜோகூரில் உள்ள தஞ்சோங் பெலபாசுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது.
மேற்கு சிங்கப்பூரின் துவாஸ் பகுதிக்கு அப்பால் இருக்கும் கடற்பகுதியில் கப்பல்கள் மோதிக் கொண்டது தங்களின் நீர்ப் பகுதியில் நடந்ததென இரு தரப்பு களும் கூறி வருகின்றன.
இது தொடர்பில் சிங்கப்பூர் துறைமுக எல்லைக்குள் அங்கீ காரமில்லாத கப்பல்கள் இருப்ப தால், அனைத்துலக கப்பல் சமூகத்திற்குத் தேவையில்லாத குழப்பம் ஏற்படும் என்றும் அது தமது கடற்பகுதியில் கப்பல் போக்குவரத்துப் பாதுகாப்புக்கு மிரட்டலை விளைவிக்கும் என் றும் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் கூறியது.
மறுபுறம் எல்லைப்பகுதி தொடர் பான விவகாரங்களிலும் தன் நாட்டுக் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்வதன் தொடர்பிலும் தகுந்த நடவடிக்கைகளை எடுக் கும் என்று மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
அத்துடன் மோதல் சம்பவத் திற்கு முன் இரு கப்பல்களும் ஒன்றுக்கொன்று தகவல் தெரி வித்துக் கொண்டதாகவும் கிரேக்கக் கப்பல் மலேசிய கப்பலை விட்டு விலகியே நீர்ப்பகுதியில் செல்லும் எனக் கூறியதாகவும் மலேசிய அமைச்சு சொன்னது.
இந்தச் சம்பவத்தை அடுத்து சிங்கப்பூரின் கடற்பகுதியிலிருந்து தனது கலன்களை மீட்டுக்கொள் ளும்படி மலேசியாவுக்கு சிங்கப்பூர் மீண்டும் நேற்று கோரிக்கை விடுத்து இருந்தது.
சனிக்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணிக்கு கப்பல்கள் மோதிக் கொண்ட இச்சம்பவத்தில் யாருக் கும் காயங்கள் ஏற்படவில்லை. அத்துடன் எண்ணெய்க் கசிவும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!