26ஆம் தேதி ‘கணிதன்’, ‘ஆறாது சினம்’, ‘நையப்புடை’ வெளியீடு

அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ‘கணிதன்’. இப்படத்தை டி.என்.சந்தோஷ் இயக்கியுள்ளார். கதாநாயகியாக கேத்ரீனா தெரசா நடித்துள்ளார். கே.பாக்யராஜ், ‘ஆடுகளம்’ நரேன், மனோபாலா, கும்கி அஸ்வின் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்துள்ளார். வருகிற 26ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தை தமிழகத்தில் மட்டும் சுமார் 450 திரையரங்குகளில் திரையிடப்போவதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார். சென்னையில் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. வரும் 26ஆம் தேதி அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆறாது சினம்’ என்ற திரைப்படமும் வெளியாகிறது. எஸ்.ஏ.சந்திரசேகர், பா.விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘நையப்புடை’ என்ற படத்தையும் அதே தேதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.