தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் சேர்வோர் அதிகரிப்பு

தொழில்­நுட்­பக் கல்விக் கழ­கத்­தில் சேரும் மாண­வர்­கள் எண்­ணிக்கை கடந்த 10 ஆண்­டு­களில் பெரு­ம­ளவு கூடி­யுள்­ளது. 2005ல் 21,603 ஆக இருந்த அந்த எண்­ணிக்கை 2014ல் 28,000 ஆகி உள்ளது. பிறப்பு எண்­ணிக்கை குறை­ வினால், உயர்­நிலைக் கல்விக்­குப் பிந்திய படிப்­பு­களில் சேர் வோர் எண்­ணிக்கை குறைந்து வரும்­போ­தும் தொழில்­நுட்­பக் கல்விக் கழ­கத்­தில் சேர்வோர் எண்­ணிக்கை கூடி வரு­வ­தாக புள்ளி விவ­ரங்கள் காட்­டு­கின் றன. கல்­வி­யாண்­டில் பள்­ளி­களில் சேரும் மாணவர் எண்­ணிக்கை 2013ல் 41,500 ஆக இருந்தது 10% குறைந்து 2014ல் 38,200 ஆனது. எனினும் அதே­கா­ல­கட்­டத்­தில் தொழில்­நுட்­பக் கல்விக் கழ­கத்­தில் சேர்ந்த மொத்த மாணவர் எண்­ணிக்கை 26,000 இலி­ருந்து 28,000 ஆக உயர்ந்தது.