எஸ்யுடிடி: அதிகமானோருக்கு வெளிநாட்டு பயிற்சி வாய்ப்பு

சிங்கப்­பூர் தொழில்­நுட்ப, வடி­வமைப்­புப் பல்­கலைக்கழ­கத்தைச் சேர்ந்த 75% மாண­வர்­கள் அடுத்த ஆண்­டுக்­குள் மாணவர் பரி­மாற்­றம், கோடைக்­கா­லப் பாடத்­திட்­டம், நிறுவன உள்­ள­கப் பயிற்சி ஆகி­ய­வற்­றின்கீழ் வெளி­நா­டு­களில் உள்ள பல்­கலைக்­ க­ழ­கங்களில் பயில்­வதற்­கான வாய்ப்­புகளைப் பெறுவர். ஒன்பது பல்­கலைக்­க­ழ­கங்கள், அமைப்­பு­களு­டன் புதிய பங்கா­ளித்­து­வத்தை ஏற்­படுத்­து­வதன் மூலம் மாண­வர்­களுக்­கான இத்­தகைய அனைத்­து­லக வாய்ப்­பு­கள் எதிர்­வ­ரும் மே மாதம் முதல் 40 விழுக்­காடு வரை உயரவி­ருப்­ப­தா­கப் பல்­கலைக்­க­ழ­கம் நேற்று அறி­வித்­தது.

சுவீ­ட­னில் உள்ள கேடிஎச் ராயல் தொழில்­நுட்ப கல்­விக்­க­ழ­கம், அமெ­ரிக்­கா­வின் ஸ்டான்­ ஃ­போர்ட் பல்­கலைக்­க­ழ­கம், பிரான்சு அல்லது இத்­தா­லி­யில் உள்ள ஐரோப்­பிய புத்­தாக்க கல்வி நிலையம் ஆகிய கல்வி நிறு­வ­னங்கள் புதிய பங்கா­ளித்­து­வத்­தில் பங்கேற்­கும். இவற்­றில் சில திட்­டங்கள் பொறி­யி­யல் வடி­வமைப்பு, தொழில்­முனைப்பு ஆகிய துறை­களில் கவனம் செலுத்­தும்.