100 மடங்கு சிறிய ராடார் கேமரா உருவாக்கம்

நன்யாங் தொழில்­­­நுட்பப் பல்­­­கலைக்­­­க­­­ழ­­­கத்தைச் சேர்ந்த அறி­­­வி­­­ய­­­லா­­­ளர்­­­கள் மிகச் சிறிய ராடார் கேம­­­ராக்­­­களைத் தயா­­­ரிப்­­­ப­­­தற்­­­கான சிறிய ‘மைக்­­­ரோ­­­சிப்’பை உரு­­­வாக்­­­கி­­­யுள்­­­ள­­­னர். தற்போது பயன்­­­பாட்­­­டில் இருக்­­­கும் சிறிய வகைச் சில்­­­லு­­­களை­­­விட 100 மடங்கு சிறி­­­யவை­­­யாக இவை உள்ளன. ராடார் கேம­­­ராக்­­­கள் பொதுவாக துணைக்­­­கோள்­­­களில் பயன்­­­படுத்­­­தப்­­­படு­­­கின்றன. இந்தப் புதிய தொழில்­­­நுட்­­­பத்­­­தின் மூலம் 200 கிலோ கிராம் எடை­­­யுள்ள கேமா­­­ராக்­­­களுக்­­­குப் பதிலாக உள்­­­ளங்கை அள­­­வி­­­லான சிறிய கேம­­­ராக்­­­களைப் பயன்­­­படுத்த முடியும்.

புதிய சில்லின் எடை 100 கிராமை­­­வி­­­டக் குறைவு என்பது குறிப்­­­பி­­­டத்­­­தக்­­­கது. புதிய வகை கேம­­­ராக்­­­கள் பழைய கேம­­­ராக்­­­களை­­­விட உயர்ந்த தரத்­­­தி­­­லான புகைப்­­­ப­­­டங்களை எடுக்க வல்லவை எனக் கூறப்பட்டது. புதிய வகைக் கேம­­­ராக்­­­களின் தயா­­­ரிப்­­­புச் செலவு 20 மடங்கு குறைந்­­­தி­­­ருப்­­­ப­­­தா­­­க­­­வும் மின்­­­சா­­­ரப் பயன்­­­பாடு 75% குறையும் எனவும் கூறப்­­­பட்­­­டது.