பட்டதாரிகளுக்கு பயிற்சியுடன் வேலை வாய்ப்பு

­­­கௌரி சந்திரா

திறன்­மிகு தேசமாக உரு­வெ­டுக்­கும் சிங்கப்­பூ­ரில் தகவல் தொழில்­நுட்­பத்­ துறையைச் சார்ந்த வேலை வாய்ப்­பு­கள் பெருகி வருகின்றன. தர­வு­களைத் திரட்டி, தக­வல்­களை ஆராய்ந்து தக்க முடி­வு­களை எடுக்க வழி­காட்­டும் தரவு ஆய்­வா­ளர் (Data St­r­a­t­e­gi­st) பணி தற்போது நிறு­வ­னங்களின் முன்­னேற்­றத்­தில் பெரும்பங்கு வகிக்­கிறது. தகவல் தொழில்நுட்பத் துறை தவிர வேறு துறைகளில் பட்டம்பெற்றவர்களும் தரவு ஆய்வாளராகப் பணியேற்கலாம். தத்துவம், அரசியல், பொருளியல் துறையில் பட்டம் பெற்ற திரு விக்நன் பன்­னீர்­செல்­வம், 28, இப்போது ‘டிபி­ட­புள்­யூஏ’ குழும நிறு­வ­னத்­தின் அனைத் துலக விளம்பர நிர்­வா­கத்­துறை யில் தரவு ஆய்­வா­ள­ராகப் பணி ­பு­ரி­கிறார்.

தொடக்கப்பள்­ளி­ மாண­வனாக இருந்த­போதே அடிப்­படைக் கணினி நிர­லாக்­கத்­தில் ஆர்வம் கொண்டார் திரு விக்நன். இருந்தா­லும், அவரது கல்விப் பாதை அதை விட்டு சற்று விலகியே அமைந்தது. தெமாசெக் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் தகவல்தொடர்பு, ஊடக நிர்­வா­கத்­தில் பட்­ட­யம் பெற்றார். அதன் பிறகு யோர்க் பல்­கலைக் கழ­கத்­தில் தத்­து­வம், அர­சி­யல், பொரு­ளி­யல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.