பள்ளியில் நடக்கும் பாடல் வெளியீடு

கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தோழா’. இதில் அவரது ஜோடியாக ‘பையா’, ‘சிறுத்தை’ ஆகிய படங்களில் நடித்த, அவருக்கு ராசியான ஜோடி எனப் பெயர் எடுத்த தமன்னா நடித்துள்ளார். மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு நாகார்ஜுனா தமிழில் நடித்துள்ள படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு மாற்றுத் திறனாளிக்கும் மனரீதியாக பெரும் போராட்டத் தில் ஈடுபடும் ஒருவனுக்கும் இடையே நடக்கும் போராட்டமே ‘தோழா’ படத்தின் கதையாம். அனைத்துத் தரப்பு ரசிகர்களுக் கும் ஏற்ற படமாக உருவாக்கப் பட்டுள்ளது. இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் அண்மையில் வெளி யிடப்பட்டது. எடுத்த எடுப்பிலேயே ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று வருகிறது.

இந் நிலையில் இப்படத்தின் இசையை 26ஆம் தேதி வெளியிடவும் படக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த விழாவை கார்த்தி சிறு வயதில் படித்த பள்ளியில் நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள் ளனராம். சிறு வயதில் படித்த பள்ளிக்கு நாயகி தமன்னாவை கார்த்தி அழைத்து வர இருக் கிறார் என்றும் அந்தப் பள்ளியில் படிக்கும் சுமார் 2500 மாணவர்கள் முன்னிலையில் இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

‘தோழா’ படத்தின் ஒரு காட்சியில் கார்த்தி, தமன்னா.