எலிகளின் தொல்லையைச் சமாளிக்க கூடுதல் நடவடிக்கை

சிங்கப்பூரில் எலிகளின் தொல்லையைச் சமாளிக்க தேசிய சுற்றுப்புற வாரியம் தமது நடவடிக்கைகளை முடுக்கிவிட உள்ளது. எலிகளால் ஏற்படும் தொல்லைகள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் அதன் மீது வாரியம் அதிகக் கவனம் செலுத்தும். கடந்த ஆண்டு மட்டும் 6,700 எலி தொல்லை புகார்கள் வாரியத்தால் பெறப்பட்டதாகவும் அந்த எண்ணிக்கை அதற்கு முந்திய ஆண்டில் 4,000ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதேபோல சோதனை நடவடிக்கைகளும் அதிகப்படுத்தப்பட்டு உள்ளன. 2014ஆம் ஆண்டு சிங்கப்பூர் முழுவதும் 140,000 உணவுக் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 148,000க்கு உயர்ந்தது. 2014ஆம் ஆண்டு 80 உணவக முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 190க்கு உயர்ந்தது.