முதல் ஜோடி சிறுநீரக மாற்று சிகிச்சை

தனது மகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவை என்று மருத்துவர்கள் கூறியபோது உடனடியாக தனது சிறுநீரகத்தைக் கொடுக்க முன்வந்தார் தாயாரான நூர் ரஃபிடா நசிர். நம்பிக்கையுடன் பரி சோதனைக்குச் சென்றபோது அவருடைய சிறுநீரகம் அவரது மகள் சித்தி ரசிடா லோக்மான் ஹடானுக்குப் பொருந்தாது என்று தெரிய வந்தது. இருவரும் துவண்டு போயினர். வேறொருவரிடமிருந்து உறுப்பு தானம் கிடைக்கும் வரை ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை மேற் கொண்டார் குமாரி சித்தி. ஆனால் நிலைமை சீரடையவில்லை. அப்போது ஒரு புதிய யோச னையை மருத்துவர்கள் முன் வைத்தனர். அதற்கு ஜோடி சிறு நீரக பரிமாற்ற ஏற்பாடு என்று பெயர்.

அந்த ஏற்பாட்டின்கீழ் குமாரி சித்திக்கு வேறொருவர் சிறு நீரகத்தைத் தானமாகத் தருவார். அதற்குப் பதிலாக திருவாட்டி ரசிடா தனது சிறுநீரகங்களில் ஒன்றை தேசிய காத்திருப்புப் பட் டியலில் உள்ள ஒருவருக்கு வழங்க வேண்டும். இந்தத் திட்டம் 2009ஆம் ஆண்டிலேயே அங்கீகரிக்கப்பட் டாலும் அவ்வாறு செய்ய விரும்பி, அதற்கான மருத்துவத் தகுதி உடைய ஒருவர் இதுவரை கிடைக் காததால் அது செயல்படுத்தப் படாமலேயே இருந்தது. ஆனால் தாயார் ரசிடாவும் மகள் சித்தியும் அதனை ஆண் டவன் தந்த வாய்ப்பாகக் கருதி அதற்கு இணங்கினர். “உறுப்பு தானம் செய்பவர் கிடைக்கக் கால தாமதமானது. எனது மகளின் நிலையும் மோசம டைந்து வந்தது. “எனவே இப்படி ஒரு வாய்ப்பு உள்ளது என்று தெரிந்தபோது நான் மகிழ்ந்தேன்,” என்றார் திருவாட்டி ரசிடா.

சிறுநீரக தானம் செய்த தாய் நூர் ரஃபிடா நசிர், வேறொருவரிடமிருந்து சிறுநீரக தானம் பெற்ற மகள் சித்தி ரசிடா லோக்மான் ஹடான். பின்னணியில் நிற்பவர்கள் (இடமிருந்து) தேசிய பல்கலைக் கழக மருத்துவமனையின் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிலையத்தின் துணை இயக்குநர் பேராசிரியர் அ வத்சலா, தேசிய பல்கலைக் கழக மருத்துவமனையின் கூ டெக் புவாட் சிறுவர்கள் மருத்துவக் கழகத்தின் போராசிரியர் யாப் ஹுய் கிம், உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பாளர் லீ ‌ஷி ஹுய், தேசிய பல்கலைக் கழக மருத்துவமனையின் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிலையத்தின் மூத்த நிபுணர் டாக்டர் தியோங் ஹோ யீ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மெக்சிகோ தேசிய அரண்மனையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபெஸ் ஓப்ரடாருடன் பிரதமர் லீ சியன் லூங். பின்னால் திருமதி லீயும் மெக்சிகோ அதிபரின் மனைவியும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Nov 2019

இதர வட்டாரங்களின் ஒத்துழைப்பு அவசியம்

தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னும் (வலம்) இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் நேற்று கூட்டாக செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Nov 2019

சிங்கப்பூர்-இந்திய தற்காப்பு உறவில் புதிய சகாப்தம்

மனைவியுடன் ரவிச்சந்திரன் (படங்கள்: முருகேசன்/இட்ஸ்‌ரெயினிங்ரெயின்கோட்ஸ்)

20 Nov 2019

வாழத் தொடங்கியதும் வந்து முடித்தது மரணம்