‘ஓ’ நிலை மாணவர்களுக்கு புதிய கணினிப் பாடம்

சிங்கப்பூரின் 19 உயர்நிலைப் பள்ளிகளில் புதிய கணினிப் பாடம் அறிமுகமாகிறது. அடுத்த ஆண்டிலிருந்து உயர்நிலை 3லிருந்து ‘Computing’ என்ற புதிய கணினிப்பாடம் கற்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது. இது, தற்போதைய கணினிப் பாடத்துக்கு (Computer Studies) மாற்றாக அமையும்.