பாரம்பரியத்தைக் கற்பிக்கும் புதிய திட்டம்

சுதாஸகி ராமன்

தொடக்கநிலை மாணவர்களுக்கு சிங்கப்பூரின் பாரம்பரியத்தைக் கற்பிக்கும் முயற்சியாக நேற்று தேசிய மரபுடைமைக் கழகம் புதிய திட்டம் ஒன்றை தொடங் கியது. மரபுடைமை தேடலாய்வாளர் திட்டம் (Heritage Explorers Programme) எனும் அந்த புதிய திட்டத்தில் கலந்துகொள்ள ஏற் கெனவே 20 பள்ளிகள் முன்பதிவு செய்துள்ளன.

சுமார் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படும் இத் திட்டம், தற்போதுள்ள தேசிய கல்வி பாடத்திட்டத்துடன் இணைந்து அமைகிறது. வரலாற்றாளர், கண்காட்சி வடிவமைப்பாளர், கல்வியாளர், அருங்காட்சியகக் காப்பாளர், மரபுடைமைத் தூதர் எனும் ஐந்து மரபுடைமை சார்ந்த துறைகளில் பங்காற்றி, மாணவர்கள் கொடுக் கப்பட்ட நடிவடிக்கைகளை முடித்து ஒவ்வொரு துறைக்கும் ஒரு முத்திரையைப் பெற்றுக் கொள்ளலாம். குடும்பத்தினர் களுடன் அரும்பொருளகங் களுக்கு சென்று வருதல், அங்கே பார்த்த கண்காட்சியைப் பற்றி எழுதுதல் பாரம்பரிய விளையாட்டு களைக் கற்றுக்கொண்டு விளை யாடுதல் போன்ற நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுவர்.

பாரம்பரிய விளையாட்டுகளைக் கற்றுக் கொள்ளும் மாணவர்கள். படம்: தேசிய மரபுடைமைக் கழகம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்