ஒரு வாளி தண்ணீருடன் டாக்சி ஓட்டுநர்களுக்கு அறிவுரை

சிங்கப்பூர் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு டாக்சி ஓட்டுநர்களை இலக்காகக் கொண்டு நேற்று ஒரு மாத கால பிரசாரம் தொடங்கப்பட்டது. இதில் கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சிஸ், டிரான்ஸ்கேப், பிரைம் டாக்சி, எஸ்எம்ஆர்டி டாக்சி ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான டாக்சி ஒட்டு நர்கள் பங்கேற்கின்றனர். இந்தப் பிரசாரத்தின் கீழ் முதல் முறையாக 11,000க்கும் மேற்பட்ட டாக்சி ஒட்டுநர்களுக்கு ஒரு வாளி தண்ணீருடன் “வாகனங் களைக் கழுவும்போது தண்ணீரை புத்திசாலித்தனமாக பயன்படுத் துங்கள்,” என்ற செய்தியும் தெரி விக்கப்படும்.

மேலும் இந்த தண்ணீர் சிக்கன செய்தி டாக்சி நிறுவனங்களில் பணியாற்றும் எஞ்சிய 38,500 டாக்சி ஓட்டுநர்களுக்கு செய்திக் கடிதம் அல்லது டாக்சியில் பொருத்தப்பட்டுள்ள தகவல் சாதனங்களின் வழி தெரிவிக்கப் படும். இது குறித்து பேசிய ‘கம்பர்ட் டெல்குரோ டாக்சிஸ்’ தலைமை நிர்வாக அதிகாரி யாங் பான் செங், வாகனங்களைக் கழுவும் போது நீரை வீணாக்காமல் இருக்கும் செய்தியை டாக்சி ஓட்டுநர் களுக்கு தெரிவிக்கும் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் முயற்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடை கிறோம்,” என்றார். பெரிய நிறுவனங்களுடன் மட்டுமல்லாமல் இவ்வாண்டு 400க்கும் மேற்பட்ட பங்காளிகளு டன் சேர்ந்து செயல்பட பொதுப் பயனீட்டுக் கழகம் திட்டமிட்டு உள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

காணொளி எடுக்கப்பட்ட மாணவி மோனிக்கா பே. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

22 Apr 2019

கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கோரும் மனு

ஹோங் கா நார்த் தொகுதியில் நேற்று நடைபெற்ற டெங்கிக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இளைய தொண்டூழியர் ஒருவர், முதிய குடியிருப்பாளர் ஒருவருக்கு டெங்கி தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விளக்குகிறார். படம்: சாவ் பாவ்

22 Apr 2019

டெங்கி சம்பவங்கள் மும்மடங்கு அதிகரிப்பு

சான் ஃபிரான்சிஸ்கோ தொழில்நுட்பக் கருத் தரங்கில் பங்கேற்ற (இடமிருந்து) ‘ஸ்ட்ரிப்’ நிறுவனத் தலைமை நிர்வாகி திரு பேட்ரிக் கொலிசன், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு சிங் கை ஃபோங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

22 Apr 2019

‘பொருளியல் சுழற்சியை சிங்கப்பூர் சமாளிக்கவேண்டும்’