மியன்மாரில் முன்கூட்டியே அதிபர் தேர்தல்

யங்கூன்: மியன்மாரில் அதிபர் தேர்தல் திட்டமிட்ட தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக நடத்தப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. வரும் மார்ச் 17ஆம் தேதிக்குப் பதிலாக மார்ச் 10ஆம் தேதியே அதிபர் தேர்தல் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்ற கீழவை, மேலவை, ராணுவம் ஆகிய வற்றைச் சேர்ந்த மூன்று அதிபர் வேட்பாளர்கள் அப்போது அறி விக்கப்படுவர். அந்த மூவரில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுபவர் அந்நாட்டின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக் கப்படுவார். மற்ற இரு வேட்பாளர்கள் துணை அதிபர் களாகப் பொறுப்பேற்பார்கள்.

மியன்மாரின் தற்போதைய அரசியலமைப்புச் சட்டப்படி, தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவி ஆங் சான் சூச்சி அதிபராக வர முடியாது. அதிபர் தேர்தலை முன் கூட்டியே நடத்துவது குறித்து பல வாரங்களாக ராணுவத் திற்கும் தேசிய ஜனநாயக லீக் கட்சிக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அதிபர் தேர்தலில் போட்டியிட அவர் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 May 2019

‘இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவது நிச்சயம்’