பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி

டாக்கா: 20 ஓவர் ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸதான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு சிற்றரசுகளை வீழ்த்தி தொடரில் அதன் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. பங்ளாதே‌ஷில் உள்ள மிர்புர் மைதானத்தில் நேற்று அதிகாலை முடிவடைந்த ஆறாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானும் ஐக்கிய அரபு சிற்றரசுகளும் மோதின. பாகிஸ்தான் அணியில் வஹாப் ரியாஸ்சுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ் அறிமுக வீரராக களம் கண்டார்.

ஐக்கிய அரபு சிற்றரசு கள் அணியில் சக்லைன் ஹெய்டெருக்கு பதிலாக உஸ்மான் முஸ்தாக் சேர்க்கப்பட்டார். பூவா தலையாவில் வென்ற ஐக்கிய அரபு சிற்றரசுகளின் கேப்டன் அம்ஜத் ஜாவித் தனது அணி முதலில் பந்தடிக்க முடிவு செய்தார். ஐக்கிய அரபு சிற்றரசுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்து இருந்தது. பாகிஸ்தான் அணியின் அபார பந்து வீச்சில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹன் முஸ்தபா 1 ஓட்டத்திலும், முகமது கலீம் 1 ஓட்டத்திலும், முகமது ஷாசத் 5 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பஹ்ரேன் விளையாட்டரங்கத்தில் ஏமனுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி பெற்ற சிங்கப்பூர். படம்: பஹ்ரேன் காற்பந்துச் சங்கம்

21 Nov 2019

ஏமனை அடக்கிய சிங்கப்பூர் அணி

பதவி நீக்கம் செய்யப் பட்ட பொக்கெட் டினோவுக்குப் (இடம்) பதிலாக ஸ்பர்சின் நிர்வாகியாக நியமிக்கப் பட்டுள்ள ஜோசே மொரின்யோ. படங்கள்: இபிஏ, ராய்ட்டர்ஸ்

21 Nov 2019

ஸ்பர்ஸின் நிர்வாகியாக மொரின்யோ நியமனம்

ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் தகுதி பெற்றதைக் கொண்டாடும் வேல்ஸ் வீரர்கள். படம்: இபிஏ

21 Nov 2019

யூரோ 2020க்குத் தகுதி பெற்ற வேல்ஸ்