அதிக சத்தமான ஒலி ஆபத்து

சுதாஸகி ராமன்

எம்­ஆர்டி ரயிலில் பயணம் செய்­யும்­போது மிகுந்த சத்­தத்­து­டன் இசையைக் கேட்கும் பய­ணி­களை நாம் பார்த்­தி­ருப்­போம். கைபே­சி­கள், இசை ஒலிக்­கும் கரு­வி­கள் போன்ற­வற்­றில் மட்­டு­மின்றி இசை நிகழ்ச்­சி­களி­லும் மதுக்­கூ­டங்களி­லும் சத்­த­மாக இசை கேட்டு மகிழ்­வது தற்போது இளை­யர்­களிடையே அதிகரித்து வரும் போக்காக இருப்பது தெரி­ய­வந்­துள்­ளது. பயணம் செய்­யும்­போது, படிக்­கும்­போது, உடற்­ப­யற்சி செய்­யும்­போது என்று பெரும்பாலான நேரங்களில் ‘இயர்­பீஸ்’ எனப்­படும் காது ஒலி­ப்பான் மூலம் சத்­த­மான இசையை இடை­வி­டா­மல் கேட்கும் இளை­யர்­கள் அதி­கப்­ப­டி­யான சத்­தத்­தால் ஏற்­ப­டக்­கூ­டிய காது கேளாமை பிரச்­சினை­யால் பாதிப்­படை­யும் வாய்ப்­பு­கள் அதி­கமா­கிறது.

ஆறில் ஓர் இளை­ய­ருக்கு இவ்வகை காது கேளாமை ஏற்­ப­ட­லாம் என்று ஈராண்­டு­களுக்கு முன்பு தெமாசெக் பல­துறைத்­ தொ­ழிற்கல்­லூ­ரி­யின் உயிர்மருத்­து­வப் பொறி­யி­யல் துறை மாண­வர்­கள் நடத்­திய ஆய்வு முடி­வு­கள் குறிப்­பிட்­டன. தெமாசெக் பல­துறை­தொ­ழிற் கல்­லூ­ரியைச் சேர்ந்த 1,928 மாண­வர்­களின் போக்கை ஆராய்ந்த இந்த ஆய்வு, பொதுவாக சிங்கப்­பூர் இளை­யர்­களின் இசை கேட்கும் போக்கை வெளிச்­சத்­திற்கு கொண்­டு­வந்­துள்­ளது. ஒட்­டு­மொத்­தத்­தில் சிங்கப்­பூர் இளை­யர்­களின் கேட்கும் போக்­கு­கள் நாளடை­வில் அவர்­களுடைய காது­களுக்­குப் பாதிப்­பு­களை ஏற்­படுத்­தும் எனக் கூறியுள்ளது செவிப்­பு­லன் கருவி உற்­பத்­தி­யா­ளர்­க­ளான சிவாண்­டோஸ் நிறு­வ­னம். இத்தகைய காது கேளாமை பற்றிய விழிப்பு­ணர்வு இளை­யர்­களிடையே குறைந்து காணப்­படு­வது வருந்தத்­தக்­கது என்­றார் அந்­நி­று­வ­னத்­தின் மூத்த ஒலி நிபுணர் ஏப்ரில் சொங்.

விழிப்புணர்வு சாலைக்காட்சியில் இளையர் ஒருவர் தாம் பொதுவாகக் கேட்கும் ஒலியின் அளவையும் அதனால் காதுகளில் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் மாதிரிகள் மூலம் அறிந்துகொள்கிறார். உடனிருந்து உதவுபவர் நவீனா தியாகராஜன் (நடுவில்). படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் குழு

இப்பகுதியில் மேலும் செய்திகள்

துன்பங்கள் நேர்ந்தபோதும், இலக்கை நோக்கி உறுதியோடு உழைத்துப் பட்டயப் படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்கும் இளையர்கள் சூர்யா, அஜே, இளம்கதிர். படம்: தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரி

20 May 2019

சிரமங்களைக் கடந்து சிகரம் தொடுபவர்கள் 

தேசிய கூடைப்பந்து லீக் போட்டி ஒன்றில் சிங்கப்பூர் ஆயுதப்படைக் குழுவைக் கடந்த ஆண்டு எதிர்த்து ‘கை‌ஷுவென்’ குழுவுக்காக விளையாடிய லவின் (இடது), தம் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தினார். 

(வலது) 2.01 மீட்டர் உயரம் கொண்ட லவின் ராஜ் பக்கத்தில் தமிழ் முரசு செய்தியாளர் வெங்கடேஷ்வரன் நின்று தன் உயரத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார். படங்கள்: ஜேசன் எங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

06 May 2019

சாதிக்கத் துடிக்கும் லவின் ராஜ்