சுவர்ப்பந்து: ஆசிய அளவில் இரண்டாம் நிலையில் சினேகா

­­­தி­மத்தி டேவிட்

சிங்கப்­பூர் தேசிய சுவர்ப்­பந்து அணியின் ஆக இளைய வீரராக இருந்தா­லும் ஆசிய இளநிலை மகளி­ருக்­கான பிரிவில் இரண்டாம் நிலையில் வரிசைப்­படுத்­தப்­பட்­டுள்­ளார் சினேகா சிவக்­கு­மார், 15. ராஃ­பிள்ஸ் பெண்கள் பள்­ளி­யில் பயின்று வரும் சினேகா, தாம் தங்­கி­யி­ருந்த தனியார் கொண்­டோ­மி­னி­யத்­தில் எட்டு வய­து முதலே தந்தை­யு­டன் சேர்ந்து சுவர்ப்­பந்து விளை­யா­டத் தொடங்கினார். அடுத்த மூன்றாண்டுகளில் ‘அல்­டி­மெட் ஸ்குவாஷ்’ எனும் சங்கத்­தில் சேர்ந்தார் சினேகா.

விளை­யாட்­டில் அதிக ஆர்­வ­மும் ஈடு­பாடும் காட்­டி­ய­தால் சங்கத்­தின் நிறு­வ­ன­ரும் தேசிய சுவர்ப்­பந்து அணியின் தலைமைப் பயிற்­று­விப்­பா­ள­ரு­மான சாண்ட்ரா வூ சினேகாவை தேசிய அணிக்­கான தேர்வில் சேர ஊக்­கு­வித்­தார். அதில் தேர்ச்சி பெற்­ற­தால் தொடக்­கப்­பள்­ளி­யில் பயிலும் போதே சினேகாவுக்­குத் தேசிய அணியின் பயிற்சித் திட்­டத்­தில் சேர அழைப்பு விடுக்­கப்­பட்­டது. பல இளையர் பிரிவு ஆட்­டங்களில் விளையாடி அனு­ப­வம் பெற்ற சினேகா, சுவர்ப்­பந்­துக்­குத் தேவையான மற்ற திறன்களை­யும் நுட்பங்களையும் தீவிர பயிற்சி மூலம் பெற்றார்.

சுவர்ப்பந்து பயிற்சியில் சினேகா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

Loading...
Load next