நடனம் மூலம் அறிவியல், தத்துவ விளக்கம்

நந்தினி அறி­வுச்­செல்­வன்

‘நம்பக்­கூ­டி­ய தன்மை’ என்று பொருள்­படும் ‘சம்பவ்னா’ எனும் நாட்டிய நிகழ்ச்சி வழியாக இயற் ­பி­ய­லின் ஓர் அங்க­மான ‘குவாண்டம் ஃபி­சிக்ஸ்’ பகு­திக்கு விளக்­கம் அளிக்­க­வி­ருக்­கிறது சிங்கப்­பூர் தேசியப் பல்­கலைக்­க­ழ­கத்­தில் நடை­பெ­ற­வுள்ள கலை நிகழ்ச்சி. “கலையும் அறி­வி­ய­லின் ஒரு பகு­தி­தான். அதைப் பறைசாற்­று­வதே இந்­ந­ட­னத்­தின் சிறப்பு,” என்று கூறினார் நிகழ்ச்­சியை வழி­ந­டத்­தும் திருமதி சாந்தா பாஸ்கர். கலைக்­கும் அறி­வி­ய­லுக்­கும் ஒரு பந்தம் இருப்­ப­தா­க­வும் அது நட­னத்­தில் பெரும்பா­லும் வெளிப்­படுத்­தப்­ப­ட­வில்லை என்றும் கூறிய திருமதி சாந்தா, இந்­ந­ட­னத்­தின் மூலம் அதை நிறை­வேற்ற விரும்­பு­வ­தா­க­ச் சொன்னார்.

‘ஸாரியா’ நிகழ்ச்சிக்காக பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவியர். படம்: என்யுஎஸ் கலைகள் மன்றம்