சாலை­களில் எண்­ணெய்க் கசிவு: அப­ரா­தம் குறித்து பரி­சீ­லனை

சாலை­களில் எண்­ணெய்க் கசி­வு­களைத் தடுக்க அப­ரா­தம் விதிக்­கப்­படு­வது குறித்து நிலப் போக்­கு­வ­ரத்து ஆணையம் பரி­சீ­லனை செய்­கிறது. இந்த ஆண்டில் சாலைகளில் நான்கு எண்­ணெய்க் கசிவு சம்ப­வங்கள் நிகழ்ந்தன. அண்மைய ஆண்­டு­களில் சாலை­களில் எண்­ணெய்க் கசி­வு­களுக்­குக் கார­ண­மா­ன­வர்­களி டம் சேத­மடைந்த சாலை­களைப் பழு­து­பார்க்­கும் செல­வுக்­காக $5,000 இலி­ருந்து $200,000 வரை ஆணையம் பெற்­ற­தாக போக்­கு­வ­ரத்து மூத்த துணை அமைச்­சர் இங் சீ மெங் நாடா­ளு­மன்றத்­தில் தெரி­வித்­தார்.

பெரும்பா­லான எண்­ணெய்க் கசி­வு­கள் விபத்­து­க­ளா­லும் வாக­னங்கள் பழு­தடைந்து நின்ற­தா­லும் நிகழ்ந்­துள்­ளன. எனவே, பொறுப்­பற்ற முறையில் வாகனம் ஓட்­டு­வதற்கு எதிரான இயக்­கங்கள் மூலம் பொது­மக்­களுக்கு விழிப்­பு­ணர்வை ஏற்­படுத்­தும் முயற்­சியை போக்­கு­வ­ரத்து போலிஸ் தொடரும் என்றார் அமைச்சர். போக்­கு­வ­ரத்து நெரிசல் ஏற்­படும்­போது வாகன ஓட்­டு­நர்­களுக்கு சாலை நில­வ­ரம் குறித்து தெரி­விக்க விரை­வுச்­சாலை கண்­கா­ணிப்பு ஆலோசனை முறையை மேம்படுத்­து­வது பற்றி ஆணையம் பரி­சீ­லனை செய்யும் என்றும் திரு இங் தெரி­வித்­தார்.