போலி மருந்து விற்ற இரு கடைகள்

கிளாக்ஸே„ஸ்மித்கிளைன் நிறுவனத் தயாரிப்பான ‘ஐ மோ ரெகுலர்’, ‘ஐ மோ மாய்ஸ்ட்’ ஆகிய கண் சொட்டு மருந்துகளின் போலிகள் இரு கடைகளில் விற்கப்பட்டதைச் சுகாதார அறிவியல் ஆணையம் கண்டுபிடித்தது. 7.5 மி.லி. அளவில் அந்தப் புட்டிகள் இருந்தன என்றும் சிங்கப்பூரில் இத்தகைய சம்பவம் நிகழ்வது இதுவே முதல் முறை என்றும் ஆணையம் தெரிவித்தது. 36, சாய் சீ அவென்யூவில் உள்ள எஸ்கிமோ ஃப்ரோஸன் ஃபுட்ஸ், 150A, பீஷான் ஸ்திரீட் 11ல் உள்ள ஹெச்.ஜே. வென்ச்சர்ஸ் ஆகிய இரு கடைகளிலும் அந்தப் போலி கண் மருந்து விற்கப்பட்டதாக ஆணையம் கூறியது. குறைந்த தரத்திலான அந்த மருந்துகளை யாரேனும் வாங்கியிருந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி விடுமாறும் ஆணையம் அறிவுறுத்தியது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்