குப்புறக் கவிழ்ந்த கார்; ஒருவர் காயம்

பார்ட்லியை நோக்கிச் செல்லும் பிராடல் சாலையில் நேற்றுப் பிற்பகலில் கார் ஒன்று குப்புறக் கவிழ்ந்ததில் 60களில் இருக்கும் ஆடவர் ஒருவர் காயமடைந்தார். பிற்பகல் 3.20 மணியளவில் சம்பவம் பற்றி தகவல் கிட்டியது என்றும் உடனடியாக அங்கு அவசர மருத்துவ வாகனம் அனுப்பப்பட்டது என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. சிறிய அளவில் காயமடைந்த அந்த ஆடவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. இந்த விபத்து காரணமாக மேரிமவுண்ட் சாலையிலும் தீவு விரைவுச்சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

Loading...
Load next