ஹில்லரி, டிரம்ப் முன்னணி

வா‌ஷிங்டன்: அதிபர் தேர்தல் வேட்பாளர் தேர்வில் இரு கட்சி களிலும் கடும் போட்டி நிலவுகிறது. இந்தப்போட்டியின் உச்சக்கட்ட மாக செவ்வாய்க்கிழமை அன்று பல மாநிலங்களில் வெற்றிகளைக் குவித்து ஜனநாயகக் கட்சியில் ஹில்லரி கிளிண்டனும் குடியரசுக் கட்சியில் டோனல்ட் டிரம்பும் முன்னணி வகிக்கின்றனர். சூப்பர் செவ்வாய்க்கிழமை அன்று 11 மாநிலங்களில் வாக் கெடுப்பு நடைபெற்றது. கிழக்கில் மசாசூசெட்ஸ் முதல் வடமேற்கில் அலாஸ்கா வரை வேட்பாளர் தேர்வு நடைபெற்றது. இதில் ஹில்லரி கிளின்டனும் டொனால்ட் டிரம்ப்பும் பெரும் பாலான மாநிலங்களில் வெற்றி பெற்றனர்.

குடியரசு கட்சியில் திரு டிரம்ப், ஏழு மாநிலங்களில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டெட் குருசுக்கு மூன்று இடங்களில் வெற்றி கிடைத்தது. மார்கோ ருபியோ 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இதற்கிடையே தனது சொந்த மாநிலமான டெக்சாஸில் பேசிய திரு குருஸ், குடியரசுக் கட்சியில் மற்றவர்கள் போட்டியிலிருந்து விலகி டிரம்புக்கு எதிராக தன்னை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் வெற்றிப் பேரணியில் பேசிய திரு டிரம்ப், வேட்பாளர் போட்டிகள் எல்லாம் முடிந்தபிறகு ஒரே ஒருவரை இலக்காகக் கொள் வேன். அவர் ஹில்லரி கிளிண் டன்,” என்றார். ஜனநாயகக் கட்சியில் ஹில்லரி கிளின்டனும் ஏழு மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்ததாக பெர்னி சாண்டர்ஸ் ஐந்து மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

போலிசுக்கு ஆதரவாகப் பேரணியில் ஈடுபட்ட ஹாங்காங் மக்கள்மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். படம்: ராய்ட்டர்ஸ்

16 Nov 2019

ஹாங்காங்கில் போலிசுக்கு ஆதரவாக பேரணி

தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பிய கிரேக், வேறு வழியின்றி முதலையின் கண்ணுக்குள் விரலைவிட்டு ஆட்டி, அதன் கவனத்தை திசைதிருப்ப வேண்டியதாயிற்று. படம்: அன்ஸ்பிளாஷ்

16 Nov 2019

முதலையின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர்