இறுதிச் சுற்றுக்குள் இந்தியா

மிர்புர்: ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அது இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பூவா தலையாவில் வென்ற இந்திய அணித் தலைவர் டோனி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக சந்திமாலும், தில்ஷனும் களமிறங்கினார்கள். சந்திமாலை நெஹ்ரா 4 ஓட்டங் களில் வெளியேற்றினார்.

18 ஓட்டங்கள் எடுத்திருந்த தில்ஷனை, பாண்டியா ஆட்டம் இழக்கச் செய்தார். இலங்கை அணி குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் அதனால் அதிக அளவில் ஓட்டங் களைச் சேர்க்க முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் பும்ரா, பாண்டியா மற்றும் அஸ்வின் ஆகி யோர் தலா இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தனர்.

Loading...
Load next