வெற்றியை நழுவவிட்ட லெஸ்டர்

லண்டன்: வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருந்த லெஸ்டர் சிட்டியை ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் ஃப்ரீ கிக் வாய்ப்பு மூலம் வெஸ்ட் பிரோம்விச் குழு வின் கிரேக் கார்ட்னர் போட்ட கோல் தடுத்து நிறுத்தியது. இதன் விளைவாக லெஸ்டர் சிட்டிக்கும் வெஸ்ட் பிரோம் விச்சுக்கும் இடையிலான ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் வெஸ்ட் பிரோம்விச் அதன் முதல் கோலை போட்டது. லெஸ்டர் சிட்டியின் தற்காப்பை உதறித் தள்ளிய சாலமன் ரொன்டன் பந்தை வலைக்குள் சேர்த்தார்.

இதனைத் தொடர்ந்து கோல் வேட்டையில் இறங்கிய லெஸ்டர் சிட்டி 30வது நிமிடத்தில் டிரிங்க் வாட்டர் மூலம் ஆட்டத்தைச் சமப்படுத்தியது. இடைவேளை முடிய சில வினாடிகள் இருந்தபோது லெஸ் டரின் கிங் தமது குழுவின் இரண்டாவது கோலை போட்டார். இதையடுத்து, லெஸ்டர் நிச்சயம் வெல்லும் என்று அசைக்க முடியா நம்பிக்கையுடன் இருந்த அதன் ரசிகர்களை கிரேக் காட்னர் எடுத்த ஃப்ரீ கிக் அதிர்ச்சியில் உறைய வைத்தது. பிரமாதமான முறையில் எடுக்கப்பட்ட அந்த ஃப்ரீ கிக் ஆட்டத்தைச் சமன் செய்தது.

வெஸ்ட் பிரோம்விச் குழுவின் சாலமன் ரொன்டன் (நடுவில்) அனுப்பிய பந்து லெஸ்டர் சிட்டி கோல்காப்பாளரைக் கடந்து சென்று வலையைத் தீண்டியது. ரொன்டனைத் தடுக்க இயலாமால் செய்வதறியாது தவித்தார் லெஸ்டர் தற்காப்பு ஆட்டக்காரர் (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்பு நடைபெற்ற இந்தப் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடியது. உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்பு நல்ல தொடக்கம் கிடைத்ததைத் துள்ளிக் குதித்துக் கொண்டாடினார் ஆப்கானிஸ்தான் அணியின் ஹஷ்மத்துல்லா ஷஹீதி (நடுவில்).

26 May 2019

திக்குமுக்காடிய பாகிஸ்தான், இலங்கை

(இடமிருந்து) மலேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் சயட் சடிக், மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுமத்தின் தலைமை நிர்வாகி ஃபெரான் சொரியானோ.

25 May 2019

மான்செஸ்டர் சிட்டி குழு உரிமையாளரின் மலேசிய முதலீடு