விரைவில் திரைகாணும் தனு‌ஷின் ‘கொடி’

‘தங்கமகன்’ படத்திற்குப் பிறகு தனுஷ் தற்போது ‘கொடி’ படத்தில் நடித்து வருகிறார். இப் படத்தை ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’ ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். இதில் தனுஷ் முதன் முதலாக அண்ணன், தம்பி என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு கதாபாத்திரத்தில் அரசியல் பிரமுகராகத் தோன்று கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. பொள்ளாச்சிப் பகுதியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. பிப்ரவரி மாத மத்தியில் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் என்று எதிர்பார்த்த நிலையில், சற்று தாமதமாக இப்போதுதான் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாம்.

தனுஷ் சம்பந்தப்பட்ட அனைத்துக் காட்சிகளும் முடி வடைந்த நிலையில் பிற நடிகர்கள் நடிக்க இருக்கும் சில காட்சிகள் மட்டுமே மீதம் உள்ளன. அதனையும் பத்து நாட்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். ‘கொடி’ படத்தில் தனு‌ஷுக்கு ஜோடியாக திரிஷா, ஷாமிலி நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷ் தனது வொண்டர்பார் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். படம் விரைவில் திரைகாண உள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் எப்போதுமே வெளிப்படையாகப் பேசவே விரும்புவேன்,” என்கிறார் பிரியா ஆனந்த். படம்: ஊடகம்

19 Nov 2019

பிரியா: வெளிப்படையாகப் பேசுவதையே விரும்புகிறேன்

கார்த்தி தனது அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் ‘தம்பி’.

19 Nov 2019

அண்ணி ஜோதிகாவுக்கு தம்பியாக கார்த்தி நடிக்கும் படம் ‘தம்பி’

விருதுகள் கலைஞர்களுக்கு மேலும் சிறப்பாக உழைக்கவேண்டும் எனும் ஊக்கத்தைத் தருவதாகச் சொல்கிறார் நடிகை அதிதி ராவ்.  படம்: ஊடகம்

19 Nov 2019

‘விருதுகள் உற்சாகம் தரும்’