41 வயதில் பிரீத்திக்குத் திருமணம்

பாலிவுட் திரையுலகில் இளைஞர்களின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தவர் பிரீத்தி ஜிந்தா. தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘உயிரே’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தியில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த பிரீத்தி ஜிந்தா, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியின் ஒரு பங்குதாரராகவும் விளங்கினார். சில ஆண்டுகளாக சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு கிரிக்கெட், நண்பர்களுடன் ஜாலியாக உலகம் சுற்றுவது எனப் பொழுதைப் போக்கிவந்த பிரீத்தி ஜிந்தா, இப்போது திருமண பந்தத்துக்குள் நுழைந்துள்ளார்.

41 வயதான பிரீத்தி ஜிந்தா தன்னுடைய நீண்டநாள் காதலரான ஜீன் குட்டினெப்பை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலிஸ் நகரில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. இந்தத் திருமணத்தில் பிரீத்தி ஜிந்தாவின் நெருங்கிய நண்பர்களான சூசன் கான், சுரில்லி கோயெல் ஆகியோரும் கலந்துகொண்டனர். திருமணத்தை எளிமையாக முடித்துக்கொண்ட பிரீத்தி ஜிந்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு ஏப்ரலில் திருமண வரவேற்பை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளாராம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘இரண்டாம் உலகப் போரின் கடைசித் துண்டு’ படக்குழுவினர்.

20 May 2019

‘ஒரு மனிதனின் கதைக்குள் பல கதைகள்’