உள்ளூர் புது பட்டதாரிக்கு தொடக்க சம்பளம் அதிகம்

சிங்கப்பூரில் முழு நேர வேலை களில் சேர்ந்த உள்ளூர் புது பட்ட தாரிகளின் சராசரி தொடக்கச் சம்பளம் அதிகரித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அவர்கள் சென்ற ஆண்டில் $135 அதிகம் பெற்றனர். பட்டதாரிகள் வேலை நியமன ஆகப்புதிய கூட்டு ஆய்வு முடிவு கள் நேற்று வெளியிடப்பட்டன. அவை இந்த விவரங்களைத் தெரி விக்கின்றன. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர் வாகப் பல்கலைக் கழகம் ஆகிய வற்றில் படித்து சென்ற 2015ல் பட்டம் பெற்ற தனிப்பட்ட பட்டதாரி கள் சென்ற ஆண்டில் மாத மொத்த சம்பளம் $3,468 பெற்ற னர். இந்த ஊதியம் 2014ல் $3,333 ஆக இருந்தது.

இதற்கிடையே, முழு நேர நிரந்தர வேலையில் சேர்ந்த புதிய பட்டதாரிகளுக்கு மாதச் சராசரி ஊதியம் சென்ற ஆண்டில் $3,300 ஆக இருந்தது. இது இரண்டு ஆண்டுகளுக்கு முன் $3,200 ஆகும் என்று ஆய்வு தெரிவித்தது. அதிக சம்பளம் ஒருபுறம் இருக்க, தங்கள் இறுதித் தேர்வை முடித்து ஆறு மாதங்களுக்குள் வேலை பெற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையும் சென்ற ஆண் டில் அதிகம். ஆய்வில் கலந்துகொண்ட வேலை பார்த்த பட்டதாரிகளில் 89.5 விழக்காட்டினருக்கு ஆறே மாதங்களுக்குள் வேலை கிடைத் தது.

இந்த அளவு 2014ல் 89.1% ஆக இருந்தது என்று ஆய்வு தெரிவித்துள்ளது. இதற்கும் மேலாக, 83.1% பட்ட தாரிகளுக்கு முழு நேர வேலை கிடைத்தது. இந்த அளவும் இரண்டு ஆண்டுகளுக்கு முந் தைய அளவைவிட 0.4% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர் வாகப் பல்கலைக்கழகம் ஆகிய வற்றைச் சேர்ந்த மொத்தம் 10,028 முழுநேர பட்டதாரிகள் இந்த 2015 கூட்டு ஆய்வில் கலந்துகொண்ட னர்.