தங்கவாள் விருது வெற்றிவீரர் குமரகுரு புத்திரன்

சுதாஸகி ராமன்

இளம் வயதில் குமரகுரு புத்திரன் ஆண்டுதோறும் தேசிய நாள் அணி வகுப்பை ஆவலோடு கண்டுகளித் தார். குறிப்பாக ராணுவ அணிவகுப் பில் கலந்து கொள்ளும் கவச வாக னங்கள் அவரை மிகவும் கவர்ந்தன. ராணுவத்தில் பணிபுரியும் அவ ருடைய உறவினர்கள் அளித்த ஆதர வினாலும் ஊக்கத்தாலும் ராணுவத் தில் சேர அவருக்கு மிகவும் ஆர்வம் பிறந்தது. சிறு வயதிலிருந்தே தாம் கண்ட கனவை நிறைவேற்றும் முயற்சியில் சிறப்பு வல்லுநர் (‘ஸ்பெஷலிஸ்ட்’) பயிற்சிப் பள்ளியில் சேர விண்ணப் பித்த குமாருக்கு அப்பள்ளியில் இடம் கிடைக்கவில்லை. இருப்பினும் விடாமுயற்சியுடன் செயல்பட்ட அவர், தமது உடற்கட்டு, தலைமைத்துவப் பண்புகள் போன்ற வற்றை மேம்படுத்திக் கொண்டு மறு படியும் சிறப்புப் பயிற்சிப் பள்ளியில் சேர விண்ணப்பித்தார். இம்முறை அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கடந்த 22 வாரங்களாக அந்தப் பள்ளியில் கடுமையான பயிற்சி பெற்ற அவர், நேற்று பாசிர் லாபா முகாமில் நடைபெற்ற பட்டமளிப்பு அணிவகுப்பில் கலந்துகொண்டு கவச வாகனப் பிரிவில் பொறுப்பை ஏற்றார். தேசிய சேவைக்கு முன் தொழில் நுட்பக் கல்விக்கழகத்தில் பொறி யியல் பயின்ற அவர், அங்கு பெற்ற அறிவு, தான் சிறப்புப் பயிற்சியில் நன்கு செயல்பட தூண்டிவிட்டதாகக் கூறினார்.

Loading...
Load next