ஹாலிவுட் படத்தில் நடிக்கும் அபிநயா

சமுத்திரக்கனி இயக்கிய ‘நாடோடிகள்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அபிநயா. மாற்றுத் திறனாளியான இவர் தற்போது ‘அடிடா மேளம்’ என்ற நகைச்சுவைப் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அபிநயாவுக்கு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிரபல ஹாலிவுட் இயக்குநரும் கின்னஸ் சாதனையாளருமான ரூபம் சர்மா இயக்கவுள்ள ‘தி லிட்டில் ஃபிங்கர்’ என்ற ஆங்கிலப் படத்தில் மொத்தம் 56 மாற்றுத் திறனாளிகள் நடிக்க உள்ளதாகவும் அவர்களில் தனது மகளும் ஒருவர் என்றும் அபிநயாவின் தந்தை ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் தங்கள் உடற்குறைபாட்டைப் பெரிதாகக் கருதாமல் சாதனை செய்வதை விளக்குவதே இந்தப் படத்தின் நோக்கம் என்று கூறப்படுகிறது. இந்த வருட இறுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் படத்தில் பணியாற்ற இருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.